வாழ்க்கையே ஜாலி தான் என 4 ராசிக்காரர்களை குதூகலிக்க செய்யும் சுக்கிரன் பெயர்ச்சி பராக்! பராக்...

Upcoming Venus Transit : சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் , செப்டம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சியும் சில ராசியினருக்கு அருமையான வாழ்க்கை அனுபவத்தைத் தரும்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2024, 09:48 PM IST
  • சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவரா?
  • வாழ்க்கை வாழ்வதற்கே எஞ்ஞாய் பண்ணும் ராசிகள்!
  • செப்டம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சி
வாழ்க்கையே ஜாலி தான் என 4 ராசிக்காரர்களை குதூகலிக்க செய்யும் சுக்கிரன் பெயர்ச்சி பராக்! பராக்...

நாளை தொடங்கவிருக்கும் பித்ரு பக்ஷத்தில் புதன் மட்டுமல்ல சுக்கிரனும் பெயர்ச்சியாகிறார். செப்டம்பர் 18ம் தேதி சுக்கிரன் துலாம் ராசிக்கு பெயர்ச்சியாகும் சுக்கிரனின் தாக்கம் அனைவரின் வாழ்விலும் மாற்றங்களை ஏற்படுத்தும். சிலருக்கு சாதகமாகவும் பலருக்கு பாதகமாகவும் இருக்கும் இந்த சுக்கிரப் பெயர்ச்சிக்கு பிறகு துலாம் ராசியில் சுக்கிரன் இருக்கும்போது, சுக்கிரனின் ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கையில் பலவிதமான நன்மைகளையும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வார்கள் , செப்டம்பர் மாத சுக்கிரன் பெயர்ச்சி சில ராசியினருக்கு அருமையான வாழ்க்கை அனுபவத்தைத் தரும்...

Add Zee News as a Preferred Source

ஆனால் ஒரேயொரு கிரகத்தின் தாக்கம் மட்டும் ஒரு ஜாதகரை பாதிக்கும் அல்லது நன்மைகளை மட்டுமே செய்துவிடுமா என்றால் கிடையாது ஜெனன ஜாதகத்தின் அடிப்படையில் ஒன்பது கிரகங்களின் இயக்கமும், அவற்றின் கலவையும் சேர்ந்தே ஒருவரின் வாழ்க்கையில் நன்மை அல்லது தீமையை செய்யும். ஒரு கிரகத்தின் பெயர்ச்சியைப் பற்றி சொல்லும்போது நன்மை தீமைகளை பட்டியலிடுவது, அந்த குறிப்பிட்ட கிரகத்தின் தாக்கம் தானே தவிர, அனைத்து கிரகங்களின் இயக்கங்களின் அடிப்படையிலானது அல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.  

அந்த வகையில் ஜாதகத்தில் சுக்கிரன் வலுவான நிலையில் இருப்பவர்களைத் தவிர, 4 ராசிக்காரர்களுக்கு இந்த சுக்கிரன் பெயர்ச்சி நல்ல பலனைத் தரும் என்று சொல்லும்போது, அது வெள்ளிக்கிழமைக்கு அதிபதியான சுக்கிரனின் நிலையை மட்டுமே வைத்து சொல்லும் ராசிபலன் கணிப்பு ஆகும். வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் கொடுக்கும் சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சியால் குதூகலம் அடையப்போகும் ராசிகளில் உங்களுடையதும் உள்ளதா என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

மேலும் படிக்க | போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!

சுக்கிரனின் செப்டம்பர் மாதப் பெயர்ச்சியால் குதூகலிக்கப் போகும் ராசிகள் 

மீன ராசி

துலாமில் சுக்கிரன் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு வாழ்க்கையில் முக்கியமான காலகட்டமாக இது இருக்கும். துலாமில் சுக்கிரனின் சஞ்சாரம், போதும் போதும் என்று சொல்லும் அளவுக்கு பண வரத்தைக் கொண்டு வந்து சேர்க்கும். நண்பர்களுடனான உறவு நல்லபடியாக இருக்கும். குழந்தைகள் வகையில் அருமையான செய்திகள் வந்து சேரும்.

விருச்சிகம் ராசி

சுக்கிரனின் ராசிப் பெயர்ச்சியால் பலனடையும் ராசிகளில் விருச்சிகம் ராசியும் அடங்கும். தடைபட்ட வேலைகள் சுலபமாக முடிவது, பொன் பொருள் சேர்க்கை, சொத்து வாங்குவது என நல்ல விஷயங்கள் நடைபெறும்.

மேலும் படிக்க | இந்த ஆண்டு பிள்ளையார் சுழி போட்டு விநாயகர் சதுர்த்தி விசர்ஜன் செய்யும் நேரம் எப்போது? கணபதியை கரைப்போம்...

ரிஷப ராசி

சுக்கிரப் பெயர்ச்சியால் ரிஷப ராசியினரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியான காலகட்டம் இதுதான் என்று சொல்லும்படி பல நல்ல விஷயங்கள் நடக்கும். குறிப்பாக, சொத்து விவகாரத்தில் இருந்த பிரச்சனைகள் உங்களுக்கு சாதகமாக முடியும் வாய்ப்புகள் தென்படுகின்றன.

கன்னி ராசி

ரிஷப ராசியினரைப் போலவே கன்னி ராசியினருக்கும் சுக்கிரப் பெயர்ச்சி நல்ல பலன்களையே செய்யும். வழக்கு விவகாரங்களில் வெற்றி கிடைக்கும், சொத்துப் பிரச்சனைகள் சாதகமாக மாறும், பொன் வாங்கும் வாய்ப்பு உண்டு.

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | குரோதி மகாளய பித்ரு பக்ஷத்தில் ஏற்படும் 2 கிரகணங்களினால் சிக்கி சீரழியப் போகும் பாவப்பட்ட ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News