சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை....

Mercury Combust in Leo 2024 : சிம்மத்தில் இருக்கும் புதன் கிரகத்தை எரிப்பு நிலைக்கு கொண்டு செல்லும் சூரியன், இன்னும் 6 நாட்களில்  5 ராசிகளை மிகவும் மோசமாக பாதிக்கும்! அவை எவை என்பதை தெரிந்து எச்சரிக்கையாக இருப்போம்..

Written by - Malathi Tamilselvan | Last Updated : Aug 6, 2024, 08:34 PM IST
  • புதன் எரிப்பு நிலையால் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள்!
  • சிம்மத்தில் எரிப்பு நிலைக்கு போகும் புதன்
  • புத்திசாலி கிரகத்தின் எரிப்பு நிலை...
சிம்மத்தில் இருந்தாலும் எரிப்பு நிலைக்கு செல்லும் புதனால் சிக்கி சீரழியப்போகும் ராசிகள்! எச்சரிக்கை.... title=

புத்திசாலித்தனம், தகவல் தொடர்பு, வர்த்தகம், வணிகம், போக்குவரத்து என பல முக்கியமான விஷயங்களுக்கு அதிபதியான புதன், 2024 ஆகஸ்ட் 12ம் நாளன்று 9:49 மணிக்கு சிம்ம ராசியில் எரிப்பு நிலைக்கு செல்கிரார். சிம்ம ராசியில் ஏற்படவிருக்கும் புதன் எரிப்பு என்ற நிலை, 12 ராசிக்காரர்களின் வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆனால், இதன் தாக்கத்தால் மிகவும் மோசமாக பாதிக்கப்பட்டு, வாழ்க்கையை நொந்துக் கொள்ளும் அளவுக்கு மனம் வருத்தப்படும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.  

அறிவுபூர்வமாக செயல்படுபவர்களின் அறிவாற்றலை அனைவரும் மதிப்பதுடன், அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு தேவையான அறிவைத் தரும் புதன் வலுவிழந்தால், பாதுகாப்பற்ற நிலை ஏற்படும். கவனக்குறைவு, கிரகிக்கும் சக்தியின்மை, மறதி என பல பின்னடைவுகளை சந்திக்கலாம். 

கிரகத்தின் எரிப்பு நிலை

ஒரு கிரகத்தின் எரிப்பு என்பது, ஒரு கிரகமானது, தனது வலிமை மற்றும் நன்மை செய்யும் குணத்தை ஒட்டுமொத்தமாக இழக்கும் நிலை ஆகும். புதன், தனது சக்தி, இயல்பு அனைத்தையும் இழந்து நிற்கும் எரிப்பு நிலை, பலரை பாதிக்கும்.  கிரகங்களில் ராகு மற்றும் கேதுவைத் தவிர வேறு எந்த கிரகமும் சூரியனுக்கு அருகில் வரும் நிலையை எரிப்பு நிலை என்று குறிப்பிடுவது வழக்கம்.

தனக்கு மிகவும் நெருக்கமாக வரும் கிரகத்தை பலவீனப்படுத்தும் சக்தியை க் கொண்டிருக்கும் சூரியன், சிம்மத்தில் இருக்கும் புதன் கிரகத்தை எரிப்பு நிலைக்கு கொண்டு செல்கிறது. பலரின் வாழ்வில் சுணக்கத்தை ஏற்படுத்தும் இந்த ஜோதிட நிகழ்வினால் மிகவும் மோசமாக பாதிக்கப்படும் ராசிகள் எவை என்பதை தெரிந்து எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மேலும் படிக்க | புதன் பெயர்ச்சி: 5 ராசிகளுக்கு வேலை, வியாபாரத்தில் அட்டகாசமான வளர்ச்சி.... பண மழையில் நனைவார்கள்

ரிஷபம்

சிம்ம ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்லும் போது தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு சிரமமான காலமாக இருக்கும். பல்வேறு தடைகளை சந்திக்க நேரிடும். வியாபாரத்தில், லாபம் எதிர்பார்த்தால், அது நஷ்டத்தைக் கொடுக்கும். போட்டியாளர்கள், உங்களுக்கு கடும் போட்டியை கொடுப்பார்கள் என்றால், குடும்பத்தில் ஏற்படும் செலவுகளை கட்டுப்படுத்த முடியாமல் திண்டாட வேண்டியிருக்கும். எனவே, விநாயகர் வழிபாட்டை ரிஷப ராசிக்காரர்கள் மேற்கொண்டால் பாதிப்பில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு, செய்யு வேலையில் அதிருப்தி அதிகரிக்ம், இது நிர்ணயித்த இலக்கை எட்ட முட்டுக்கட்டையாக இருக்கும். வியாபாரிகளுக்கு ஏற்படும் கஷ்டத்தைத் தடுக்க வேண்டுமானால், நிதானமாக செயல்பட வேண்டும். செலவுகள் அதிகரிக்கலாம். சிம்ம ராசியில் புதன் எரிப்பு நிலைக்கு செல்வதால், குடும்பத்தில் வாக்குவாதம், கருத்து வேறுபாடு தோன்றலாம்.  

விருச்சிகம்
விருச்சிக ராசிக்காரர்களின் வளர்ச்சிக்கு தடை ஏற்படும் காலம் இது. லாபத்தை பற்றி நினைக்க முடியாது என்று சொல்லும் அளவுக்கு தொழிலில் பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும், அதிக நஷ்டம், போட்டி அதிகரித்தாலும், செலவும் அதிகரிப்பதால் மனதில் கவலைகள் அதிகரிக்கும். அத்துடன் தேவையற்ற ஈகோ பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். 

மகரம்
சிம்மத்தில் புதன் எரிப்பு நிலைக்கு செல்வதால், காரணமே இல்லாமல் கோபம் ஏற்படும், நிதானம் தவறி விடும் வார்த்தைகள் பிரச்சனைகளை அதிகரிக்கும். வியாபாரத்தில், கவனம் அவசியம், செய்யும் சிறிய தவறு கூட மிகப் பெரிய பிரச்சனைக்கு காரணமாகலாம். செலவுகளை ஈடுகட்ட சிரமம் ஏற்படுவதால் மன அழுத்தம் ஏற்படும், கவலைகள் அதிகரிக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ஆடி செவ்வாயில் உமையன்னைக்கு விரதம்! மங்கலங்களை மங்காமல் தரும் மங்கள கெளரி விரதம்...

மேலும் படிக்க | புத்திசாலித்தனத்தால் அனைவரையும் கவரும் 5 ராசிகள்! ‘இந்த’ ராசிக்காரர்களிடம் அப்படி என்ன ஸ்பெஷல்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News