துலாமில் நுழையும் சுக்கிரன் யாருக்கெல்லாம் சூப்பர்? யாருக்கெல்லாம் டூப்பர்? உங்கள் ராசி என்ன?

Venus in Virgo : துலாம் ராசிக்குள் நுழையவிருக்கும் சுக்கிரன், எந்தெந்த ராசிக்காரர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைக் கொடுப்பார்? யாருக்கு எப்படி என்றாலும், இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு சூப்பர் தான்!!! 

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 10, 2024, 09:07 PM IST
  • துலாம் ராசிக்குள் நுழையவிருக்கும் சுக்கிரன்
  • மூன்று ராசிக்காரர்களுக்கு சூப்பர்
  • துலாம் ராசிக்கு பண வரத்து
துலாமில் நுழையும் சுக்கிரன் யாருக்கெல்லாம் சூப்பர்? யாருக்கெல்லாம் டூப்பர்? உங்கள் ராசி என்ன? title=

அனைத்து கிரகங்களும் குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு தங்கள் ராசியை மாற்றுவதாக ஜோதிடத்தில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் சுக்கிரன் பெயர்ச்சி பலராலும் அதிகமாக கவனிக்கப்படுகிறது. ஏனென்றால், மகிழ்ச்சி, வசதி, வளம், புகழ், பிரபல்யம் மற்றும் செழுமைக்கு காரணமான கிரகமான கிரகம் சுக்கிரன் ஆவார். துலாமில் சுக்கிரன் சஞ்சாரம் செய்தால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ராசிகள் எவை என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

தற்போது சுக்கிரன் கன்னி ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். 2024 செப்டம்பர் 18 அன்று மதியம் இரண்டு மணிக்கு துலாம் ராசியில் பிரவேசிக்கும் சுக்கிரனின் இந்த ராசி மாற்றத்தால் மூன்று ராசிக்காரர்கள் சிறப்பான பலன்களைப் பெறப் போகிறார்கள். 

துலாமில் சுக்கிரன் சஞ்சாரம் செய்தால் உற்சாகத்தில் துள்ளிக் குதிக்கும் ராசிகள் இவை...

துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் சஞ்சாரத்தால் எல்லாவிதங்களிலும் ஆதாயம் கிடைக்கும். இந்த காலகட்டத்தில், பொருளாதாரத அபிவிருத்தி, தொட்டதெல்லாம் லாபம் என அருமையான காலகட்டமாக இருக்கும். வேலை செய்யும் இடத்திலும், சமூகத்திலும் பிறரின் ஆதரவு அதிகரிக்கும். வேலை தேடுபவர்களுக்கு அவர்கள் விரும்பிய வேலை கிடைக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலம் என்று சொல்வார்களே, அது இந்த காலம் தானோ என்று தோன்றும் அளவுக்கு அருமையான  பலன்களை துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் கொடுப்பார். திருமணம் கைகூடும், குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும் வாய்ப்புகள் அதிகம்.

மேலும் படிக்க | போதாத காலம் வரப்போகுது எச்சரிக்கை! சூரியன் பெயர்ச்சியால் 5 ராசிகளுக்கு மோசம்!

மகரம்
துலாமில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், மகர ராசிக்காரர்களின் வாழ்வில் மகிழ்ச்சி வந்து சேரும், புத்திசாலித்தனம் மற்றும் திறமையுடன் தொழில், வியாபாரம் என பல துறைகளில் ஈடுபட்டவர்களுக்கும் முன்னேற்றம் ஏற்படும். குடும்பத்தில் தந்தையுடனான உறவு வலுப்பெறும், குடும்பத்தினரின் ஆதரவைப் பெறுவீர்கள். எந்த ஒரு புதிய வேலையையும் தொடங்க நினைத்தால் அதில் வெற்றி பெறலாம். பணியிடத்தில் ஊக்கமும் ஒத்துழைப்பும் அதிகரிக்கும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் துலாம் சஞ்சார காலம் சிறப்பாக இருக்கும். இந்த காலகட்டத்தில், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் உங்களுக்குக் கிடைக்கும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். குடும்ப வாழ்க்கையில் வரும் பிரச்சனைகள் தீரும், கடந்த காலங்களில் இருந்து வந்த பிரச்சனைகள் இத்துடன் முடிந்து போகும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும், கவலைகள் நீங்கும். உத்தியோகத்தில் பதவி உயர்வு, விரும்பிய இடத்திற்கு பணியிட மாற்றம் என விரும்பிய அனைத்தும் வாய்க்கும் காலம் இது. 

(பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது.)

மேலும் படிக்க | Guru Vakra Peyarchi 2024 : ரிஷபத்தில் வக்ரமாகும் குரு! வக்ர இயக்கத்தால் பணமழையில் நனைந்து மகிழும் ராசிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News