சுக்கிரனின் மாற்றத்தால் கண்களின் கண்ணீர் வரும்! சிலருக்கு ஆனந்தக் கண்ணீர்! ஆனால் பலருக்கு???

Venus Transit: ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதம் அவர்களுக்கு இருக்கும், பணவரவும் செல்வாக்கும் அதிகரிக்கும்.

Written by - Malathi Tamilselvan | Last Updated : Sep 16, 2022, 08:05 PM IST
  • கிரகங்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்கும் சோதிடக்கலை
  • சுக்கிர பெயர்ச்சி ராசிபலன்
  • உங்களுக்கு சுக்கிரன் சுபரா? அசுபரா?
சுக்கிரனின் மாற்றத்தால் கண்களின் கண்ணீர் வரும்! சிலருக்கு ஆனந்தக் கண்ணீர்! ஆனால் பலருக்கு??? title=

புதுடெல்லி: ஜோதிட சாஸ்திரத்தில் சுக்கிரனுக்கு என ஒரு முக்கியமான இடம் உண்டு. ஒருவரின் ஜாதகத்தில் சுக்கிரன் வலுப் பெற்றிருந்தால், அன்னை மகாலட்சுமியின் ஆசீர்வாதம் அவர்களுக்கு இருக்கும், பணவரவும் செல்வாக்கும் அதிகரிக்கும். ஆனால், சுக்கிரன் அசுபமாக இருக்கும்போது, ​​பல பிரச்சனைகள் எழுகின்றன. சிம்மத்தில் சுக்கிரன் செல்வதால் அனைத்து ராசியினரின் வாழ்க்கையிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். செப்டம்பர் 15 ஆம் தேதி சிம்ம ராசிக்கு சென்ற சுக்கிரன்  ராசிகளின் நிலையில் எதுபோன்ற மாற்றங்களை ஏற்படுத்துவார் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

மேஷம்: மன நிம்மதி ஏற்படும். பொறுமையாக இருங்கள். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நிலவும். குழந்தையின் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை, ஆனால் அதே நேரத்தில் நண்பர்களின் ஆதரவைப் பெறும் யோகத்தையும் சுக்கிரன் கொடுக்கிறார். அமைதியும் மகிழ்ச்சியும் ஏற்படும். நம்பிக்கை அதிகரிக்கும். லாப வாய்ப்புகள் அமையும். நல்ல செய்தி கிடைக்கும்.

ரிஷபம்: நம்பிக்கையும், நேசமும் அதிகரிக்கும், தன்னிறைவு ஏற்படும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால் வாழ்க்கைத் துணையுடன் பேசும்போது கவனம் தேவை. இல்லாவிட்டால் பிரிவு ஏற்படலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. உணவில் நாட்டம் அதிகரிக்கும். 

மேலும் படிக்க | Astro: ஏழரை நாட்டு சனி பாதிப்பில் இருந்து தப்பிக்க சில எளிய பரிகாரங்கள்

மிதுனம்: உடல் ஆரோக்கியம் மேம்படும். பொழுதுபோக்கு தொடர்பான விஷயங்களில் கலந்து கொண்டு மனம் மகிழ்வீர்கள். பிரச்சனைகள் குறையும் என்றாலும் பொறுமையாக இருக்க முயற்சி செய்யுங்கள். பேச்சில் மென்மை இருக்கும், ஆனால் இயல்பில் எரிச்சலும் கூடும். பழைய நண்பர்களை சந்திப்பீர்கள்.  

கடகம்: மன அமைதி குறையலாம். குடும்பத்தினரின் ஆதரவு கிடைக்கும். வியாபாரத்தில் கவனம் செலுத்துங்கள். சிரமங்கள் வரலாம். வாழ்க்கைத் துணைக்கு உடல்நலக் கோளாறுகள் ஏற்படலாம். புனித யாத்திரை செல்லலாம். சகோதரர்களின் ஒத்துழைப்பால் தொழில் வாய்ப்புகள் கிடைக்கும்.

சிம்மம்: குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை அறிந்து செயல்படுவீர்கள். தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு பல தரப்பினரின் ஒத்துழைப்பு கிடைக்கும். நீண்ட நாட்களாக இருந்துவந்த சிக்கல்கள் தீரும். 

கன்னி: உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கலாம், வேறு இடத்துக்கு பணி மாற்றம் கிடைக்கும் வாய்ப்பும் உண்டு. குடும்பத்தில் மகிழ்ச்சி குறையலாம். நீங்கள் முழு நம்பிக்கையுடன் இருப்பீர்கள், ஆனால் பொறுமை குறையும். குடும்பத்துடன் புனித யாத்திரை செல்லும் வாய்ப்பு உண்டு.  

Also Read | இந்த ஆண்டு நவராத்திரி ஏன் முக்கியமானது? தெரிந்துக் கொள்வோம்

துலாம்: நம்பிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உத்தியோகஸ்தர்களின் ஆதரவு கிடைக்கும். முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளையும் காணலாம். பணிச்சுமை அதிகரிக்கும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வியாபாரம் விரிவடையும். 

விருச்சிகம்: பொறுமையாக இருங்கள். அதிருப்தி உணர்வுகள் மனதில் ஏற்படலாம். வியாபாரம் மேம்படும். வாழ்க்கையில் துக்கமும் உண்டு என்பதை புரிந்துக் கொள்ளும் நேரம் இது. கடின உழைப்பு தேவைப்படும் காலம் இது. மனைவியிடமிருந்து பணம் வாங்குவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கிறது

தனுசு: தன்னிறைவாக இருங்கள். உங்கள் உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள். மனைவியின் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். தந்தையின் ஆதரவு கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். மகிழ்ச்சியை நாம் தான் உருவாக்க வேண்டும் என்பதை புரிந்துக் கொண்டால் எந்நாளும் நிம்மதியே. 

Also Read | இறைவனுக்கு உகந்த எட்டு வகையான மலர்கள் எவை? தெரியுமா?

மகரம்: கலை அல்லது இசை மீதான ஆர்வம் அதிகரிக்கும். பேச்சில் இனிமை அதிகரிக்கும், ஆனால் பொறுமையும் குறையலாம். சொத்து பராமரிப்புக்கான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் வரலாம், எது எப்படியிருந்தாலும், உணர்ச்சிகளைக் கட்டுக்குள் வைத்திருங்கள்.

கும்பம்: அதிருப்தியும் திருப்தியும் மாறி மாறி வரும் காலம் இது. பணியில் இடம் மாறுவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். மன நிம்மதி இருக்கும், வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும்.

மீனம்: கல்விப் பணிகளில் கவனம் செலுத்துங்கள். பணியிடத்தில் சிரமங்கள் இருக்கலாம். ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். வேலைப்பளு அதிகமாக இருக்கும். உத்தியோகத்தில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகள் கூடும். வருமானம் அதிகரிக்கும், ஆனால் செலவுகளும் அதிகரிக்கும், எது எப்படியிருந்தாலும் பொறுமை அவசியம் என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான அனுமானங்கள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களுக்கு பொறுப்பேற்காது. )

மேலும் படிக்க | Astro Remedies: கால சர்ப்ப தோஷத்தை நீக்கும் சில எளிய பரிகாரங்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News