கோலி-யின் சதம் வீண் ஆனது; போராடி தோற்றது இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

Updated: Mar 8, 2019, 09:35 PM IST
கோலி-யின் சதம் வீண் ஆனது; போராடி தோற்றது இந்தியா!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்ற மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா 32 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டி20, 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. 

இந்நிலையில் இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவாது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்து விளையாடிது. 

ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரோன் பின்ச் 93(99), உஸ்மான் காஜிவா 104(113) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கெளன் மேக்ஸ்வெல் 47(31) ரன்கள் குவித்தார், மார்க்கஸ் 31 ரன்கள் குவித்து இறுதி நேரத்தில் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

இதன் காரணமாக ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 313 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை குவித்தார்.

இதனையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. தொடக்க வீரர்களாக களமிறங்கிய சிகர் தவான் 1(10), ரோகித் ஷர்மா 14(14) ரன்களில் வெளியேற அணித்தலைவர் கோலி நிதானமாக விளயாடி 123(95) ரன்கள் குவித்தார். எனினும் இவரைத்தொடர்ந்த வந்த வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற ஆட்டத்தின் 48.2-வது பந்தில் இந்தியா அனைத்து விக்கெட்டையும் இழந்து தவித்தது. 281 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இந்த இந்தியா 32 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் போட்டையை கைவிட்டது.

முன்னதாக இத்தொடரின் 2 போட்டிகளில் வெற்றிப்பெற்ற இந்தியா இன்றைய போட்டியில் தோல்வியடைந்த போதிலும் 2-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்று வருகிறது.