இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு!

இரண்டு டி20, 5 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கா வரும் பிப்ரவரி மாதம், ஆஸ்திரேலியா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது!

Updated: Jan 10, 2019, 02:15 PM IST
இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் மார்ச் மாதம் வரை நீட்டிப்பு!
Pic Courtesy: twitter/@BCCI

இரண்டு டி20, 5 ஒருநாள் கொண்ட தொடரில் விளையாடுவதற்கா வரும் பிப்ரவரி மாதம், ஆஸ்திரேலியா அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது!

இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பினை BCCI இன்று வெளியிட்டுள்ளது.

தற்போது ஆஸ்திரேலியா பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரக்கெட் அணி, 3 டி20, 4 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகின்றது. முன்னதாக டி20 தொடர் சமநிலையில் முடிந்த நிலையிலும், டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றிய நிலையிலும் வரும் ஜன., 12 துவங்கி 16-ஆம் நாள் வரு 3 ஒருநாள் போட்டிகள் நடைப்பெறவுள்ளது.

இந்நிலையில் இத்தொடரை அடுத்து தாயகம் திரும்பும் இந்தியா அணியுடன், ஆஸ்திரேலியா அணியும் அடுத்த தொடரை இந்தியாவுடன் எதிர்கொள்ள இந்தியா வருகிறது.

BCCI வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி., 

  • முதல் டி20 வரும் பிப்ரவரி 24-ஆம் நாள் பெங்களூருவில் நடைபெறுகிறது.
  • இரண்டாவது டி20 வரும் பிப்ரவரி 27-ஆம் நாள் விசாகபட்டினத்தில் நடைபெறுகிறது.
  • முதல் ஒருநாள் வரும் மார்ச் 2-ஆம் நாள் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.
  • இரண்டாவது ஒருநாள் வரும் மார்ச் 5-ஆம் நாள் நாக்பூரில் நடைபெறுகிறது.
  • மூன்றாம் ஒருநாள் வரும் மார்ச் 8-ஆம் நாள் ரான்சியில் நடைபெறுகிறது.
  • நான்காம் ஒருநாள் வரும் மார்ச் 10-ஆம் நாள் மொகாலியில் நடைபெறுகிறது.
  • ஐந்தாம் ஒருநாள் வரும் மார்ச் 13-ஆம் நாள் டெல்லி மைதானத்தில் நடைபெறுகிறது.