உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019-ன் 20-வது லீக் ஆட்டத்தில் இலங்கைக்கு எதிராக ஆஸிதிரேலியா அணி 334 ரன்கள் குவித்துள்ளது!
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் 2019, இங்கிலாந்து நாட்டில் நடைப்பெற்று வருகிறது. இத்தொடரின் 20-வது லீக் ஆட்டம் லண்டன் ஓவல் மைதானத்தில் நடைப்பெற்றது. இப்போட்டியில் இலங்கை மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதின.
இப்போட்டியில் டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச்சு தேர்வு செய்து விளையாடியது. இதனையடுத்து முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 334 ரன்கள் குவித்தது.
அணியில் அதிகப்பட்சமாக அரோண் பின்ச் 153(132) ரன்கள் குவித்தார். அவருக்கு துணையாக ஸ்டீவன் ஸ்மித் 73(59), கெளன் மேக்ஸ் வெல் 46(25) ரன்கள் குவித்தனர்.
இலங்கை அணி தரப்பில் இருஷ் உடானா, தனசெழிய டி செல்வா தலா 2 விக்கெட் வீழ்த்தினர். இதனையடுத்து 335 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆஸ்திரேலியா களமிறங்கவுள்ளது.
நடப்பு தொடரில் இதுவரை 4 போட்டிகளில் விளையாடியுள்ள இலங்கை அணி ஒன்றில் தோல்வி, ஒன்றில் வெற்றி என 4 புள்ளுகள் குவித்துள்ளது. மற்ற இரண்டு போட்டிகள் மழையின் குறுக்கீட்டால் முடிவில்லாமல் முடிந்த நிலையில் தற்போது புள்ளிப்பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியா அணி 6 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளது.