BCCI: மீண்டும் தொடங்கும் Ranji Trophy போட்டிகள் 2021-22 தேதிகள் அறிவிப்பு

2021-22 உள்நாட்டு சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடக்கவிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. COVID-19 பரவலினால் இந்தியாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு எட்டுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Jul 4, 2021, 09:01 AM IST
  • உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் தொடங்குகின்றன
  • சையத் முஷ்டாக் அலி டிராபி அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கும்
  • ரஞ்சி டிராபி 2021 நவம்பர் 16 முதல் 2022 பிப்ரவரி 19 வரை நடைபெறும்
BCCI: மீண்டும் தொடங்கும் Ranji Trophy போட்டிகள் 2021-22 தேதிகள் அறிவிப்பு title=

புதுடெல்லி: 2021-22 உள்நாட்டு சீசன் இந்த ஆண்டு செப்டம்பர் முதல் நடக்கவிருப்பதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. COVID-19 பரவலினால் இந்தியாவில் ஏற்பட்ட சுகாதார நெருக்கடியை கருத்தில் கொண்டு எட்டுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை இது.

இந்த பருவத்தில் செப்டம்பர் 21 ஆம் தேதி தொடங்கும் ஒருநாள் லீக் ஆட்டங்களின் முதல் போட்டியில் சீனியர் மகளிர் அணி விளையாடும், 

இந்த போட்டிகள் பெண்கள் கிரிக்கெட்டின் முக்கியத்துவத்தை முன்னெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்ளும். சையத் முஷ்டாக் அலி டிராபி (Syed Mushtaq Ali Trophy) அக்டோபர் 20 ஆம் தேதி தொடங்கும் என்றும் பிசிசிஐ அறிவித்துள்ளது.

கடந்த ஆண்டு இந்தியாவின் உள்நாட்டு கிரிக்கெட்டில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த உள்நாட்டு போட்டித்தொடர் கொரோனா (Coronavirus) பரவல் காரணமாக ரத்து செய்யப்பட்டது. இந்த சீசனில் போட்டிகள் நடத்தப்படும். 2021 நவம்பர் 16 ஆம் தேதி தொடங்கி 2022 பிப்ரவரி 19 வரை மூன்று மாதங்கள் இந்த போட்டிகள் நடைபெறும்.  

"கோவிட் -19 தொற்றுநோய் காரணமாக கடந்த சீசனில் ரத்து செய்யப்பட்ட ரஞ்சி டிராபி (Ranji Trophy), 2021 நவம்பர் 16 முதல் 2022 பிப்ரவரி 19 வரை மூன்று மாத காலகட்டத்தில் விளையாடப்படும்" என்று பிசிசிஐ வெளியிட்ட அறிக்கை கூறுகிறது.  

விஜய் ஹசாரே டிராபி (Vijay Hazare Trophy) பிப்ரவரி-மார்ச் மாதங்களில் விளையாடப்படும். இந்தியாவில் 2021-22 ஆண்டுக்கான உள்நாட்டு போட்டிகளில் சுமார் 2127 ஆட்டங்கள் விளையாடப்படும்."விஜய் ஹசாரே டிராபி பிப்ரவரி 23, 2022 முதல் மார்ச் 26, 2022 வரை நடைபெறும்" என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

Also Read | இன்ஸ்டாகிராமில் விராட் கோலியின் ஒரு பதிவின் மதிப்பு என்ன தெரியுமா?

ஐபிஎல் மீது ஆர்வம் காட்டும் இந்திய அணி (Team India) வீரர்களும் மற்றவர்களும் ஒப்பந்தங்களைக் கொண்டுள்ளனர். ஆயினும்கூட, உள்நாட்டு விளையாட்டுகளை மட்டுமே நம்பியிருக்கும் நபர்கள் கடந்த பருவத்தில் பொருளாதார ரீதியாக நஷ்டத்தை சந்தித்தனர். தற்போது பிசிசிஐ-யின் அறிவிப்பு விளையாட்டு வீரர்களுக்கு உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.

இந்தியாவின் அனைத்து உள்நாட்டு வீரர்களிடமும் ஒப்பந்த கட்டமைப்பை மேற்கொள்ள முடியுமா என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகளை மாபெரும் வெற்றியாக மாற்ற முடியும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ள பி.சி.சி.ஐ, அதே நேரத்தில் அனைவரின் நலனையும் பாதுகாப்பையும் பாதுகாக்க வேண்டியதால் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் கவனத்தில் கொண்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று கூறுகிறது.
 
"உள்நாட்டு போட்டிகளை வீரர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்போடு நடத்துவதில் பி.சி.சி.ஐ கவனம் கொண்டுள்ளது. அனைவரின் ஆரோக்கியமும், பாதுகாப்பும் மிகவும் முக்கியமானது" என்று பி.சி.சி.ஐ (BCCI) வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Also Read | முதல் பந்தில் விக்கெட் சேட்டை செய்த அதிரடி வீரர் கிறிஸ் கெயில்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News