T10 League BCCI: ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் (IPL 2024) இந்தியாவில் அதன் கோடைக்காலமான ஏப்ரல் - மே காலகட்டங்களில் நாடு முழுவதும் உள்ள பல்வேறு நகரங்களில் பரந்தளவில் நடைபெறும். ஐபிஎல் தொடர்தான் உலகளவில் நடைபெறும் கிரிக்கெட் தொடர்களிலேயே செல்வம் கொழிக்கும் தொடர் எனலாம். டி20 லீக்குகளின் வெற்றி வடிவமாக ஐபிஎல் தற்போது விளங்குகிறது.
மேலும், ஐபிஎல் தொடர் என்பது பிரீமியர் லீக் கால்பந்து (Football Premier League) தொடருக்கு ஒத்த அளவிலான சந்தைக்கு எடுத்துச்செல்ல பிசிசிஐ பல்வேறு முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. தொலைக்காட்சி பார்வையாளர்கள் என்பது ஐபிஎல் தொடருக்கு சீசனுக்கு சீசன் அதிகரித்து வருகிறது எனலாம். குறிப்பாக, ஐபிஎல் தொடரின் சொத்து மதிப்பு 2022ஆம் ஆண்டில் 8.4 பில்லியன் அமெரிக்க டாலர் ஆக இருந்தது. அதுவே, கடந்த 2023 சீசனில் 10.7 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்ந்துள்ளது. அதாவது, சுமார் 28% அதிகரித்துள்ளது. ஐபிஎல் அமைப்பின் மொத்த பிராண்ட் மதிப்பு 433% அதிகரித்துள்ளது.
ஐபிஎல் தொடர் பெரும் உச்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருக்கும் அதே வேளையில், 10 ஓவர்களுக்கான அதாவது டி10 வடிவ கிரிக்கெட் தொடரை (T10 League) இந்தியாவில் தொடங்குவதற்கு பிசிசிஐ பரிசீலித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். டி20 தொடரை போன்றே டி10 போட்டிகளும் தற்போது டிரெண்டாகி வரும் சூழலில், அந்த சந்தையையும் விடக்கூடாது என பிசிசிஐ திட்டமிடலாம்.
இந்த தொடர் வரும் 2024ஆம் ஆண்டு செப்டம்பர், அக்டோபர் மாதங்களுக்கு இடையே நடைபெறலாம் என தகவல் வெளியாகி உள்ளது. மேலும், இதற்கான திட்டங்களை பிசிசிஐ (Board Of Cricket Control In India) செயலாளர் ஜெய் ஷா (Jay Shah) முன்னெடுத்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது. சர்வதேச கிரிக்கெட்டுகளை விட இனி பிரான்சைஸ் கிரிக்கெட்தான் பெரும் பணம் புரளும் தொடராக இருக்கப்போகிறது. எனவே, பிசிசிஐ அதற்கான முன்னெடுப்பை வேகமாக எடுக்க வாய்ப்புள்ளது.
தற்போது, பிசிசிஐ முன்மொழியும் ஐபிஎல் போன்ற எந்தவொரு புதிய மாடலையும் மறுக்கும் உரிமை பிரான்சைஸ்களுக்கு உள்ளது என்று தகவல் கூறப்படுகிறது. இந்த புதிய லீக்கைத் தொடங்குவதற்கு முன் பிசிசிஐ கருத்தில் கொள்ள வேண்டிய சில முக்கியமான காரணிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. ஐபிஎல்லின் பிரபலத்தை குறைத்துக்கொளளாமல் இருக்க வயது வரம்பைக் கொண்டிருப்பது மற்றும் லீக்கில் சிறந்த வெள்ளை-பந்து கிரிக்கெட் வீரர்கள் பங்கேற்பதை உறுதி செய்வது ஆகியவை இதில் அடங்கும்.
தற்போது, கிரிக்கெட் வாரியங்கள் இருதரப்பு தொடர்கள் மூலம் போதுமான அளவு சம்பாதிக்கவில்லை, மேலும் இந்த புதிய தொடர் மற்றும் சாத்தியமான வருவாய் பகிர்வு மாதிரி ஆகியவை இந்த வாரியங்களுக்கு நிதி ரீதியாக உதவக்கூடும் என்றும் அது கூறியது. இருப்பினும், இது ஒருநாள் போட்டி வடிவத்திற்கு பெரும் ஆபத்தை விளைவிக்கும் எனலாம்.
இந்தியாவைப் பொறுத்தவரை, நிதி தேவை என்பது அவசரம் என்று கிடையாது, உலகளவில் பணக்கார கிரிக்கெட் வாரியம் என்றால் பிசிசிஐதான். சவூதி அரேபியா ஐபிஎல் தொடரில் முதலீடு செய்ய இருப்பதாக சமீபத்தில் ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது. திட்டங்களின் கீழ், இங்கிலீஷ் பிரீமியர் லீக் அல்லது ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக்கைப் போன்றே மற்ற நாடுகளில் 5 பில்லியன் டாலர்கள் முதலீடு செய்து, மற்ற நாடுகளுக்கு விரிவாக்கம் செய்ய உதவியது. இருப்பினும், புதிய லீக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் பிசிசிஐயால் (BCCI) இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க | இந்தியாவுக்கு ஆடப்போகும் அடுத்த தமிழக வீரர் இவர் தான் - அஸ்வின் கணிச்சா மிஸ் ஆகாது
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ