இது சென்னை சூப்பர்ர்ர் கிங்ஸ்! 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது!

ஐபிஎல் 2021 பைனல் போட்டியில் 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது சென்னை.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 16, 2021, 12:01 AM IST
இது சென்னை சூப்பர்ர்ர் கிங்ஸ்! 4வது முறையாக கோப்பையை கைப்பற்றியது!  title=

ஐபிஎல் 2021 போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிரான இன்றைய ஐபிஎல் போட்டியில் 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அபார வெற்றி பெற்றுள்ளது.  குவாலிபையர் 2 போட்டியில் டெல்லியை வீழ்த்தி சென்னை அணியுடன் பைனல் போட்டியில் இன்று ஆடியது கொல்கத்தா அணி.  டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.  இரு அணிகளும் முந்தைய போட்டியில் ஆடிய அதே வீரர்களுடன் களம் இறங்கியது.  தோனி இன்று தனது 300வது டி20 போட்டியில் கேப்டனாக களம் இறங்கினார்.  

முதலில் பேட்டிங் ஆடிய சென்னை அணி ஆரம்பம் முதலே அதிரடி காட்டியது.  சென்னை அணியின் பேட்ஸ்மேன்கள் கொல்கத்தா அணியின் பவுலர்களை சிதறடித்தனர்.  இன்றைய ஆட்டத்தில் 32 ரன்கள் அடித்த ருத்ராஜ் ஐபிஎல் 2021 அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்தார்.  முதல் விக்கெட்டுக்கு 61 ரன்கள் சேர்த்தது ருத்ராஜ் மற்றும் பாப் டு பிளசி ஜோடி.  அதன்பின் களமிறங்கிய ராபின் உத்தப்பா 15 பந்தில் 3 சிக்சர்கள் உட்பட 31 ரன்கள் அடித்து தனது கடமையை சரிவர செய்து அவுட்டானார்.  சுனில் நரைன், வருன் சக்ரவர்த்தி, ஷகிப் அல் ஹசன் என கொல்கத்தா அணியின் ஸ்பின்னர்களை சிதறடித்தார்.  கடைசியாக இறங்கிய மெயின் அலியும் 20 பந்துகளில் 3 சிக்சர்கள் 2 பவுண்டரி உட்பட 37 ரன்கள் அடித்தார்.

59 பந்துகளில் 3 சிக்சர்கள் 7 பவுண்டரிகள் என 86 ரன்கள் அடித்த பாப் டு பிளசி ஐபிஎல் 2021ல் அதிக ரன்கள் அடித்த வீரர்கள் பட்டியலில் 2வது இடம் பிடித்தார்.  2 ரன்கள் வித்தியாசத்தில் முதலிடத்தை தவறவிட்டார் பாப் டு பிளசி.  20 ஓவர் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 192 ரன்கள் குவித்தது. சென்னை அணியில் தோனி, ராயுடு, ஜடேஜா போன்ற வீரர்கள் களம் இறங்காமலேயே  கேகேஆர்க்கு  ஒரு வலுவான இலக்கை நிர்ணயித்தது.  

 

அதன்பின் களம் இறங்கிய கொல்கத்தா அணியின் ஓபனிங் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்தனர். கில் 51 ரன்களும், ஐயர் 50 ரன்களும் விளாசினார்.  ஒரு கட்டத்தில் இந்த போட்டியில் கொல்கத்தா அணி வெற்றி பெறும் என்ற நிலை வந்தது.  11வது ஓவரை வீசிய தாகூர் போட்டியை சென்னை பக்கம் திருப்பினார். அதன் பின் சிறப்பாக பந்து வீசிய சென்னை பவுலர்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தினர்.  இறுதியில் கொல்கத்தா அணி 20 ஓவர் முடிவில் 9 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே அடுத்தது.  இதன் மூலம் இந்த போட்டியில் சென்னை அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

 

ALSO READ ஆரஞ்சு கேப்பை கைப்பற்றிய ருத்ராஜ் கெய்குவாட்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR

Trending News