யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி - காரணம் அந்த பாலிவுட் நடிகை..!

MS Dhoni Yuvraj Singh : யுவ்ராஜ் சிங் உடன் நல்ல நட்பில் இருந்த தோனி ஒரு பாலிவுட் நடிகையின் என்டிரிக்குப் பிறகு இருவருக்குமான உறவில் மிகப்பெரிய விரிசல் ஏற்பட்டது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 9, 2024, 04:03 PM IST
  • தோனி யுவ்ராஜ் சிங் பிரிந்தது ஏன்?
  • தீபிகா படுகோன் மீது வந்த காதல்
  • தோனிக்கு அப்போதே மிகப்பெரிய வருத்தம்
யுவ்ராஜ் சிங் முகத்தில்கூட முழிக்க கூடாது என நினைத்த தோனி  - காரணம் அந்த பாலிவுட் நடிகை..! title=

MS Dhoni Yuvraj Singh : இந்திய கிரிக்கெட் அணிக்காக ஒன்றாக விளையாடியபோது தோனி, யுவ்ராஜ் சிங் இருவரும் நல்ல நண்பர்களாக இருந்தனர். 2007 ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பை வெற்றிக்குப் பிறகு இருவருக்கும் இடையே திடீரென விரிசல் ஏற்பட்டது. யுவ்ராஜ் சிங்கை நேருக்கு நேர் பார்ப்பதைக்கூட தவிர்த்தார் தோனி. ஒரே அணியில் இருந்தாலும் களத்தை தவிர இருவரும் வெளியில் பேசிக்கொள்வதை முற்றிலுமாக நிறுத்திவிட்டனர். ஒரு கட்டத்தில் யுவ்ராஜ் சிங்கை கேப்டன் என்ற முறையில் அணியில் எடுப்பதைகூட தோனி விரும்பவில்லை. இந்தளவுக்கு யுவ்ராஜ் சிங் மீது தோனிக்கு கோபம் வர காரணம் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் தான். 

மேலும் படிக்க | ஒலிம்பிக் ஹாக்கி : இந்தியா வெற்றி.. வெண்கல பதக்கத்தை கைப்பற்றியது!

ஆம், தோனி கிரிக்கெட்டில் வளர்ந்து வந்து கொண்டிருந்த நேரத்தில் பாலிவுட் நடிகை தீபிகா படுகோன் உடன் கிசுகிசுக்கப்பட்டார். இருவரும் அப்போது டேட்டிங் செய்ய தொடங்கியிருந்த நேரம். திபீகா படுகோனின் பட புரோமோஷனுக்காக ஷாருக்கானிடம் எல்லாம் தோனி பேசியதாக தகவல் வெளியானது. ஒரு விழா ஒன்றில் தீபிகா படுகோன் நடனமாட, அதனை பார்க்க யுவ்ராஜ் சிங்குடன் தான் தோனி சென்றிருந்தார். அப்போது, தீபிகா நடனமாடுவதை பார்த்துக் கொண்டிருந்த தோனியை யுவ்ராஜ் சிங் கிச்சுகிச்சு மூட்டி கிண்டலடிப்பார். இந்த வீடியோ எல்லாம் அப்போதே வைரலானது.

ஆனால் தீபிகா படுகோன் தோனியின் ரிலேஷன்ஷிப் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. திடீரென தீபிகா படுகோன் யுவ்ராஜ் சிங்குடன் டேட்டிங் செய்ய ஆரம்பித்தார். இந்த இடத்தில் தான் தோனிக்கும் யுவ்ராஜ் சிங்குக்கும் இடையே மன வருத்தம் ஏற்பட்டது. அப்போது இருந்து யுவ்ராஜ் சிங்கை ஒதுக்க ஆரம்பித்தார் எம்எஸ் தோனி. பேட்டி ஒன்றில் கூட யுவ்ராஜ் சிங்கும் நானும் நண்பர்கள் என நினைத்துக் கொண்டிருக்கிறார்கள், ஒரு அணியில் கிரிக்கெட் விளையாடுகிறோமே தவிர நாங்கள் பால்ய நண்பர்கள் எல்லாம் இல்லை என வெளிப்படையாகவே தோனி பேசினார். 2011 ஆம் ஆண்டு உலகக்கோப்பைக்குப் பிறகு யுவ்ராஜ் சிங்கை முற்றிலும் அணியில் இருந்தும் ஓரம்கட்டினார் தோனி. 

மறுபுறம் தீபிகா படுகோன் - யுவ்ராஜ் சிங் ரிலேஷன்ஷிப்பும் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. இவரும் ஒருசில ஆண்டுகள் டேட்டிங் செய்தபோதும், யுவ்ராஜ் அணுகுமுறை தனக்கு பிடிக்கவில்லை என வெளிப்படையாகவே கூறிவிட்டார் தீபிகா. யுவ்ராஜ் சிங் மிகவும் பொசஷிவ்வாக இருப்பதாகவும், தன்னுடைய நடிப்பில் எல்லாம் தலையிடுகிறார், அது எனக்கு பிடிக்கவில்லை என்றும் கூறி அவரிடம் ஒதுங்கிக் கொண்டார். இருப்பினும் தீபிகா படுகோனால் தோனி, யுவ்ராஜ் சிங் நட்பில் ஏற்பட்ட விரிசல் இன்றுவரை சரியாகவில்லை. 

மேலும் படிக்க | வெறித்தனமாக வீசிய பாகிஸ்தான் வீரர்... நீரஜ் சோப்ரா தங்கத்தை தவறவிட்டது எப்படி?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News