IPL 2022: அதிக சம்பளம் பெறப்போகும் அந்த 3 வீரர்கள் யார் தெரியுமா..!!

ஐபிஎல் 2022 போட்டிகளுக்காக, அணிகள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களில் விராட் கோலி, எம்எஸ் தோனி அல்ல, இந்த 3 வீரர்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 1, 2021, 03:44 PM IST
IPL 2022: அதிக சம்பளம் பெறப்போகும் அந்த 3 வீரர்கள் யார் தெரியுமா..!! title=

இந்தியன் பிரீமியர் லீக் 2022 சீசனுக்காக தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலை அணிகள் சமர்பிப்பதற்கான காலக்கெடு செவ்வாய்க்கிழமை (நவம்பர் 30) ​​முடிவடைந்தது. தற்போதுள்ள எட்டு ஐபிஎல் உரிமையாளர்கள் அதிகபட்சமாக 3 இந்தியர்கள், 2 வெளிநாட்டு வீரர்கள் மற்றும் 2 அன் கேப்ட் இந்தியர்களுடன் 4 வீரர்களை தக்கவைத்துக் கொள்ள அனுமதிக்கப்பட்டனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK), டெல்லி கேப்பிடல்ஸ் (DC), கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) மற்றும் மும்பை இந்தியன்ஸ் (MI) ஆகியோர் தலா 4 வீரர்களைத் தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளனர். ராஜஸ்தான் ராயல்ஸ் (RR), ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (SRH) தலா 3 வீரர்களையும், பஞ்சாப் கிங்ஸ் (PBKS) 2 வீரர்களையும் தக்கவைத்துள்ளன.

இந்நிலையில், ஐபிஎல் 2022 போட்டிகளுக்காக, அணிகள் தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களில் விராட் கோலி, எம்எஸ் தோனி (MS Dhoni) அல்ல, இந்த 3 வீரர்களுக்கே அதிக சம்பளம் கிடைக்கும் என்ற ஆச்சர்யத் தகவல் வெளியாகியுள்ளது

இதில், மும்பை இந்தியன் வீரர் ரோகித் சர்மா, சிஎஸ்கேயின் ரவீந்திர ஜடேஜா, தில்லி அணியின் ரிஷப் பந்த் ஆகியோர் தலா ரூ.16 கோடி சம்பளம் பெறுவார்கள் என கூறப்படும் நிலையில், தக்கவைக்கப்பட்ட வீரர்களில் இந்த மூவரின் சம்பளம் மிக அதிகமாக உள்ளது. RCBயின் விராட் கோலி ரூ.15 கோடியும், SRH-ன் கேன் வில்லியம்சன் மற்றும் RR-ன் சஞ்சு சாம்சன் தலா ரூ.14 கோடியும் சம்பளமாக பெறுவார்கள். மும்பை அணியின் ஜஸ்பிரித் பும்ரா, PBKS அணியின் மயங்க் அகர்வால்,  CSK அணியின் எம்எஸ் தோனி,  KKR அணியின் ஆண்ட்ரே ரசல் ஆகியோர் தலா ரூ.12 கோடி பெறுவார்கள்.

ALSO READ | CSK-வில் தோனிக்கு 2-ம் இடம் ஏன்? யார் எடுத்த முடிவு? சுவாரஸ்ய தகவல்

அணிகள் ஐபிஎல் 2022 போட்டிகளுக்காக தக்கவைத்துக் கொண்டுள்ள வீரர்களின் முழு பட்டியல் மற்றும் அவர்கள் பெறும் சம்பளம்:

சென்னை சூப்பர் கிங்ஸ் (CSK): ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), மகேந்திர சிங் தோனி (ரூ. 12 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி).

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: ஆண்ட்ரே ரசல் (12 கோடி), வருண் சக்கரவர்த்தி (8 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (ரூ. 6 கோடி).

சன்ரைசர்ஸ் ஹைதராபாத்: கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி).

மும்பை இந்தியன்ஸ்: ரோஹித் சர்மா (ரூ. 16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (ரூ. 12 கோடி), சூர்யகுமார் யாதவ் (ரூ. 8 கோடி), கீரன் பொல்லார்டு (ரூ. 6 கோடி).

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்: விராட் கோலி (ரூ.15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (ரூ.11 கோடி), முகமது சிராஜ் (ரூ.7 கோடி).

டெல்லி கேப்பிடல்ஸ்: ரிஷப் பந்த் (ரூ. 16 கோடி), அக்சர் படேல் (ரூ. 9 கோடி), பிரித்வி ஷா (ரூ. 7.5 கோடி), அன்ரிச் நார்ட்ஜே (ரூ. 6.5 கோடி)

ராஜஸ்தான் ராயல்ஸ்: சஞ்சு சாம்சன் (ரூ. 14 கோடி), ஜோஸ் பட்லர் (ரூ. 10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (ரூ. 4 கோடி).

பஞ்சாப் கிங்ஸ்: மயங்க் அகர்வால், அர்ஷ்தீப் சிங்.
 
ALSO READ | தோனிக்கு பிறகு இவர்தான் CSK கேப்டன்: போட்டுடைத்த அணி வீரர்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News