இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை பெங்களூர் சின்னச்சாமி ஸ்டேடியத்தில் தொடங்குகிறது.
ஸ்டீவன் சுமித் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டித் தொடரில் விளையாட இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து வருகிறது.
புனேயில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 333 ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. ஆஸ்திரேலியா 1-௦ என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
புனே டெஸ்டில் ஏற்பட்ட படுதோல்வியால் வீரர்கள் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதனால் நாளைய டெஸ்டில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பதிலடி கொடுக்குமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனே ஆடுகளம் போல் இல்லாமல் பெங்களூர் பிட்ச் பேட்டிங் மற்றும் பந்து வீச்சுக்கு உகந்ததாக இருக்கும். டெஸ்ட் நாளை காலை 9.30 மணிக்கு தொடங்குகிறது. ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டெலிவிஷனில் இந்த போட்டி நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
'It's important to accept defeat and learn from your mistakes,' @imVkohli ahead of the 2nd Test against Australia #INDvAUS pic.twitter.com/1ZXDyOTV39
— BCCI (@BCCI) March 3, 2017