இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோஹ்லி தற்போது உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளார் மற்றும் இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. 33 வயதான கோலி கடைசியாக 2019ம் ஆண்டு தனது சர்வதேச சதத்தை பதிவு செய்தார். அதன் பிறகு ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வருகிறார். இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் மற்றும் T20I தொடர்களில் கோலி சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 11 மற்றும் 20 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். T20-களில் அவரது இரண்டு இன்னிங்ஸ்களில் 12 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது.
மேலும் படிக்க | ரோகித் சர்மாவிடம் உள்ளது கோலியிடம் இல்லை - பாகிஸ்தான் வீரர் கருத்து!
அனைத்து தோல்விகள் இருந்தபோதிலும், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவர் சவுரவ் கங்குலி மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். “சர்வதேச கிரிக்கெட்டில் கோலி நடித்துள்ள ரன்களை பாருங்கள், அது திறமை மற்றும் தரம் இல்லாமல் நடக்காது. ஆம், அவர் தற்போது ஒரு கடினமான நேரத்தை அனுபவித்து வருகிறார், அது அவருக்குத் தெரியும். அவர் திரும்பி வந்து நன்றாகச் விளையாடுவதை காண ஆர்வமுடன் உள்ளேன். ஆனால் அவர் தனது வழியைக் கண்டுபிடித்து வெற்றிபெற வேண்டும், அவர் கடந்த 12-13 ஆண்டுகளாக அல்லது அதற்கும் மேலாக விளையாடி வருகிறார். விராட் கோலியால் மட்டுமே அதைச் செய்ய முடியும்”என்று BCCI தலைவர் சவுரவ் கங்குலி ANI செய்தி நிறுவனத்திடம் பிரத்தியேகமாகப் பேசுகையில் கூறினார்.
#WATCH | London, UK | Look at the numbers he (Virat Kolhi) has got in international cricket, that doesn't happen without ability & quality. Yes, he has had a tough time & he knows that, he has been a great player himself: BCCI president Sourav Ganguly on Virat Kohli's poor form pic.twitter.com/RMqDYsnbKq
— ANI (@ANI) July 13, 2022
கோஹ்லியின் மோசமான ஃபார்ம் மிகப்பெரிய விமர்சனத்திற்கு வழிவகுத்தது மற்றும் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான கபில் தேவ் மற்றும் வெங்கடேஷ் பிரசாத் போன்ற சிலரும் டி20 அணியில் அவரது இடத்தை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். "இவை விளையாட்டில் நடக்கும். இது அனைவருக்கும் நடந்துள்ளது. சச்சினுக்கும் நடந்தது, ராகுலுக்கும் நடந்தது, எனக்கும் நடந்தது, கோஹ்லிக்கும் நடந்தது. வருங்கால வீரர்களுக்கும் இது நடக்கும். இது விளையாட்டின் ஒரு பகுதி மற்றும் ஒரு விளையாட்டு வீரராக நீங்கள் கேட்க வேண்டும், அது என்ன என்பதை அறிந்து கொண்டு உங்கள் விளையாட்டை விளையாட வேண்டும் என்று நான் நினைக்கிறேன், ”என்று சீனியர் வீரர்களின் கருத்துக்கு கங்குலி விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க | ஆடாம ஜெயிச்சோமடா! பாகிஸ்தானுடன் விளையாடாமலே வெற்றி பெற்ற இந்தியா!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR