இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு!

India vs Pakistan: நடப்பு டி20 உலகக் கோப்பை தொடரில் மட்டுமின்றி இனி இந்த வீரரால் எந்த டி20 உலகக் கோப்பை போட்டியும் விளையாட முடியாத சூழல் உருவாகி உள்ளது.

Written by - Sudharsan G | Last Updated : Jun 6, 2024, 03:13 PM IST
  • ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், குல்தீப் யாதவ் ஆகியோருக்கு இப்போது வாய்ப்பளிக்கப்படவில்லை.
  • பாகிஸ்தான் - இந்தியா போட்டி வரும் ஜூன் 9ஆம் தேதி நடைபெறுகிறது.
  • அதே பிளேயிங் லெவனை தொடரவே இந்தியா விரும்புகிறது.
இனி இந்த இந்திய வீரர் டி20 உலகக் கோப்பையில் விளையாடவே மாட்டார்... கரைந்து போகும் கனவு! title=

India vs Pakistan 2024 Match Updates: ஐபிஎல் தொடருக்கு பின் பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடர் (ICC T20 World Cup 2024) கடந்த ஜூன் 2ஆம் தேதி தொடங்கியது. ஒவ்வொரு ஐசிசி தொடரும் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையேதான நடைபெறும் என்றாலும், இம்முறை போட்டிகள் அமெரிக்காவில் நடைபெறுவதால் கூடுதல் எதிர்பார்ப்பு இருக்கிறது. காரணம், இதை வரை முன்னணி வீரர்களே அந்தச் சூழலுக்கு பழக்கப்பட்டவர்கள் கிடையாது, பவுண்டரிகளும் நீண்ட தூரங்கள் இருக்கும், அவுட்பீல்ட் வேகமாக இருக்காது, ஆடுகளம் எப்போது எப்படி செயல்படும் என்றும் தெரியாது என டெஸ்ட் விளையாடும் அணிகளும் சரி, கத்துக்குட்டி அணிகளும் சரி ஒரு சமமான பந்தயந்தில் ஓடும் நிலை வந்துள்ளது.

பாகிஸ்தான் போட்டிக்கு காத்திருக்கும் இந்தியா...

ஒவ்வொரு போட்டியும் பரபரப்பாக போய்கொண்டிருக்கும் வேளையில், இந்தியா - அயர்லாந்து (IND vs IRE) அணிகள் மோதிய போட்டியும் பரபரப்பாக நிறைவடைந்தது. முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து அணி 96 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது.  இந்திய அணி (Team India) பந்துவீச்சில் பாண்டியா 3, பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள், அக்சர் படேல் மற்றும் சிராஜ் தலா 1 விக்கெட்டை கைப்பற்றினர். தொடர்ந்து விளையாடிய இந்திய அணி 12.2 ஓவர்களிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. 

விராட் கோலி 1, சூர்யகுமார் யாதவ் 2 ரன்களை எடுத்து ஏமாற்றமளித்தனர். இருப்பினும் ரோஹித் சர்மா ரிட்டயர்ட் ஹர்ட் மூலம் வெளியேறினாலும் அவர் 37 பந்துகளில் 4 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் என 52 ரன்களை அடித்தார். ரிஷப் பண்ட் 26 பந்துகளில் 3 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் என 36 ரன்களை அடித்தார். இந்திய அணி முதல் போட்டியை வென்று அசத்திய நிலையில், இதே கையோடு வரும் ஜூன் 9ஆம் தேதி இதே நியூயார்க் நாசாவ் கவுண்டி கிரிக்கெட் மைதானத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள உள்ளது. 

மேலும் படிக்க | டி20 உலக கோப்பை : பிசிசிஐ தேர்வுக்குழுவை கடுமையாக திட்டிய ரவிசாஸ்திரி

டாப் ஆர்டரில் மாற்றத்திற்கு வாய்ப்பில்லை

நேற்றைய போட்டியில் ரோஹித் சர்மா - விராட் கோலி இணையே ஓப்பனிங்கில் களமிறங்கியது. இது பலரும் எதிர்பார்த்ததுதான். யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்குமா என்பது பெரும் கேள்வியாகவே உள்ளது. ரிஷப் பண்ட் ஒன்-டவுணில் மிரட்டுவதால் சஞ்சு சாம்சனுக்கும் தற்போதைய சூழலில் வாய்ப்பு கிடைப்பது அரிது. மிடில் ஆர்டரில் சூர்யகுமார், தூபே, ஹர்திக் பாண்டியா, ஜடேஜா ஆகியோரை மாற்ற வாய்ப்பே இல்லை எனலாம்.

இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Team India Playing XI) மாற்றம் செய்ய வேண்டும் என்றால் அது லோயர் ஆர்டரில்தான் செய்ய முடியும். டாப் ஆர்டரில் கை வைத்தால் காம்பினேஷனில் சிக்கல் வர வாய்ப்பிருக்கிறது. அப்படி பார்க்கும்போது கடைசி நான்கு வீரர்களில் பும்ரா, அர்ஷ்தீப் ஆகியோர் நிலையானவர்கள். நேற்றைய போட்டியில் சிராஜ் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோர் விளையாடிய இடத்தில் மட்டுமே மாற்றம் வர வாய்ப்பிருக்கிறது. 

குல்தீப் யாதவ் எப்போது?

நேற்றைய போட்டியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள், 2 விரல் ஸ்பின்னர்கள் உடன் இந்தியா சென்றது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குல்தீப் யாதவை ரோஹித் நேற்று சேர்க்கவில்லை. நேற்றைய சூழலும் வேகப்பந்துவீச்சுக்கு சாதகமாக இருந்தால் அந்த முடிவு எடுக்கப்பட்டது. எனவே, பாகிஸ்தான் அணிக்கு எதிரான சூழல் மற்றும் ஆடுகளத்தை பொறுத்து அந்த அணியில் குல்தீப் யாதவ் சேர்க்கப்படுவார். அக்சர் பட்டேல் உங்களுக்கு பந்துவீச்சில் மட்டுமின்றி பீல்டிங்கிலும், பேட்டிங்கிலும் கைக்கொடுப்பார் என்பதால் குல்தீப் யாதவை கொண்டுவர வேண்டும் என்றால் சிராஜே வெளியே அமர வேண்டும் எனலாம்.

சஹாலுக்கு இடமே இல்லை 

அமெரிக்காவை விடுத்து மேற்கு இந்திய தீவுகள் சென்றாலும் இதேதான் நிலைமையும். அப்படியிருக்க இந்திய அணி ஸ்குவாடில் இடம்பெற்றுள்ள யுஸ்வேந்திர சஹாலுக்கு இந்த தொடரிலும் ஒரு போட்டியில் கூட இடம் கிடைக்காதோ என்ற அச்சம் எழுந்துள்ளது. சஹால் வலது கை லெக் ஸ்பின்னர் என்றாலும் குல்தீப் யாதவ் இருப்பதால் அவரை எடுத்து வருவதில் சிக்கல் இருக்கிறது. அக்சர் படேலுக்கு பதில் அவரை கொண்டு வந்தாலும் பேட்டிங் ஆர்டர் ஜடேஜாவோடு நின்றுவிடும். 

சஹால் இதுவரை ஒருமுறை கூட டி20 உலகக் கோப்பை போட்டிகளில் விளையாடியதில்லை. கடந்த 2022ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை ஸ்குவாடில் தேர்வான சஹால், அதில் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. அதேநிலை தான் இப்போதும் உள்ளது. அப்போது அவரது இடத்தை அஸ்வின் பிடித்தார், இப்போது அவரின் உற்ற தோழரான குல்தீப் யாதவ் பிடித்துவிட்டார். அது மட்டும்தான் வித்தியாசம். 2026ஆம் ஆண்டில் அவர் டி20 உலகக் கோப்பையில் இடம்பிடிப்பது மிக மிக கடினம் என்ற நிலையில், 

மேலும் படிக்க | டி20 உலகக் கோப்பை 2024: 35 வயதுக்கும் மேல் விளையாடும் 10 வீரர்கள்... மூத்த வீரர் யார் தெரியுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News