பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை பெருசா எதுவும் செய்யவில்லை; இந்தமுறை சாதிப்பாரா ரோகித்?

IND vs PAK: கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் 'ஹிட்மேன்' என்று பிரபலமாக அறியப்படும் ரோஹித் சர்மா உட்பட பல முக்கிய வீரர்கள் மீது இருக்கும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Oct 21, 2021, 06:30 PM IST
  • 'ஹிட்மேன்' என்று பிரபலமாக அறியப்படும் ரோஹித் சர்மா மீது கண்.
  • அக்டோபர் 24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று இந்தியா, பாகிஸ்தான் மேட்ச்.
  • அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் 10 வது இடத்தில் ரோஹித்.
பாகிஸ்தானுக்கு எதிராக இதுவரை பெருசா எதுவும் செய்யவில்லை; இந்தமுறை சாதிப்பாரா ரோகித்? title=

IND vs PAK: டி 20 உலகக் கோப்பை விழா தொடங்கியது. தகுதிப் போட்டிகளுக்குப் பிறகு, சூப்பர் -12 நிலைப் போட்டிகள் சனிக்கிழமை முதல் நடைபெறும். சூப்பர் -12 இல் அதிகம் விவாதிக்கப்படும் போட்டி இந்தியா vs பாகிஸ்தான் ஆட்டம் தான் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை. 

கிரிக்கெட் ரசிகர்களால் இந்திய அணியின் பரம எதிரியாக கருதப்படும் பாகிஸ்தான் அணியுடன் வரும் அக்டோபர் 24 (ஞாயிற்றுக்கிழமை) அன்று துபாய் மைதானத்தில் ஆடவுள்ளது. இந்த போட்டியில், கிரிக்கெட் ரசிகர்களின் கண்கள் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் மற்றும் 'ஹிட்மேன்' என்று பிரபலமாக அறியப்படும் ரோஹித் சர்மா உட்பட பல முக்கிய வீரர்கள் மீது இருக்கும்.

டி 20 போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிரான  ரோகித்தின் சாதனை:
ரோஹித் பாகிஸ்தானுக்கு எதிராக மொத்தம் ஏழு டி 20 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார், அதில் 'ஹிட்மேன்' ரோஹித் சர்மா பெருசா எதையும் சாதிக்கவில்லை. பாகிஸ்தானுக்கு எதிராக ​​6 போட்டிகளில் பேட் செய்ய ரோஹித்துக்கு வாய்ப்பு கிடைத்தது. அதில் அவர் 17.50 சராசரி அடிப்படையில் 70 ரன்கள் எடுத்துள்ளார். இருப்பினும், அவரது ஸ்ட்ரைக் ரேட் 129.62 ஆக இருந்தது. பாகிஸ்தானுக்கு எதிராக டி 20 போட்டியில் அதிகபட்ச ரன்கள் என பார்த்ததால், அவுட் ஆகாமல் 30 ரன்கள் எடுத்தது தான். 2007 ஆம் ஆண்டில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடும் போது இந்த ரன்னை ரோஹித் அடித்தார்.

அதிக ரன்கள் பட்டியலில் 10வது இடம்:
இந்தியா-பாகிஸ்தான் டி 20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய அணியின் துணை கேப்டன் ரோஹித் 10 வது இடத்தில் உள்ளார். இந்திய அணி கேப்டன் விராட் கோலி (6 போட்டிகளில் 254 ரன்கள்) முதலிடத்தில் உள்ளார். 2016 உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் தனது கடைசி டி 20 போட்டியை விளையாடினார். இந்தப் போட்டியில், அவர் 11 பந்துகளில் வெறும் 10 ரன்கள் எடுத்த விக்கெட்டை இழந்தார்.

ALSO RED |  ரோஹித் சர்மா, விராட் கோலிக்கு இடையே என்ன பிரச்சனை? பயிற்சியாளர் ரவிசாஸ்திரி பதில்

2019-ல் ஒரு சதம் அடித்தார் ரோகித்:
டி 20 போட்டிகளை விட பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் ரோஹித்தின் பேட் அதிகமாக விளையாடியுள்ளது. அவர் பாகிஸ்தானுக்கு எதிராக 16 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். சராசரியாக 51.43 மற்றும் 88.78 ஸ்ட்ரைக் ரேட் விதத்தில் ஆடியுள்ளார். அதில் அவர் 2 சதங்கள் மற்றும் 6 அரை சதங்களை அடித்துள்ளார். அவர் இரண்டு முறை ஆட்டமிழக்காமல் நாக்-அவுட் ஆக பெவிலியன் திரும்பினார். ரோஹித் கடைசியாக 2019 ஒருநாள் உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடினார். அவர் 113 பந்துகளில் 14 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 140 ரன்கள் எடுத்தார குறிப்பிடத்தக்கது. 

ALSO RED |  Best Captain: சிறந்த கேப்டன் ரோஹித் சர்மாவா? விராட் கோலியா?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக ஊடகங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News