IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்! இந்த 3 பேருக்கு வாய்ப்பு இல்லை!

IND vs SL Playing 11: இந்தியா மற்றும் இலங்கை அணிகள் மோதும் முதல் டி20 போட்டி இன்று இரவு 7 மணிக்கு தொடங்குகிறது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Jul 27, 2024, 01:50 PM IST
  • இன்று தொடங்கும் டி20 போட்டி.
  • இலங்கையில் போட்டிகள் நடைபெறுகிறது.
  • இரவு 7 மணிக்கு துவங்குகிறது.
IND vs SL: இந்திய அணியின் பிளேயிங் 11 இதுதான்! இந்த 3 பேருக்கு வாய்ப்பு இல்லை! title=

இலங்கை அணிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி இன்று முதல் டி20 போட்டியில் விளையாட உள்ளது. மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரிலும், மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரிலும் இந்திய அணி விளையாட உள்ளது. தலைமை பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தலைமையில் விளையாடும் முதல் தொடர் இதுவாகும். இதனால் இந்த தொடரின் மீது அதிக எதிர்பார்ப்பு உள்ளது. மேலும் ஹர்திக் பாண்டியாவிற்கு பதிலாக சூர்யகுமார் யாதவ் டி20 அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை தொடர்பான இந்திய அணி அறிவிக்கப்பட்டதிலிருந்து பல சர்ச்சைகள் எழுந்து வருகிறது. சமீபத்தில் சிறப்பாக விளையாடி வரும் ருதுராஜ், அபிஷேக் சர்மா போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. 

மேலும் படிக்க | ஐபிஎல் 2025ல் வீரராக களமிறங்கும் பொல்லார்ட்? மும்பை இந்தியன்ஸ்க்கு ஜாக்பார்ட்!

அதே சமயம் தொடர்ந்து ரன்கள் அடிக்க சிரமப்பட்டு வரும் சுப்மான் கில் துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.  இந்த நிலையில் இன்றைய போட்டியில் விளையாடும் 11 அணியில் யார் யாருக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு உள்ளது. சூர்யகுமார் யாதவ் இதுவரை 7 போட்டிகளில் இந்தியாவை வழிநடத்தியுள்ளார். அதில் 5 போட்டிகளில் வெற்றியும், 2 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளார். இதுவரை இந்தியா மற்றும் இலங்கை அணிகள் டி20 கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் விளையாடி உள்ளது. அதில் 19 முறை இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை அணியில் உள்ள முக்கிய வீரர்களான நுவான் துஷார மற்றும் துஷ்மந்த சமீர இருவரும் காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறி உள்ளது அவர்களுக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

அவர்களுக்கு பதிலாக தில்ஷான் மதுஷங்க மற்றும் அசித்த பெர்னாண்டோ ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியா அணியில் பயிற்சியின் போது முகமது சிராஜ் வலது காலில் அடிபட்டுள்ளது என்று செய்திகள் வெளியாகி உள்ளது. ஆனால் அவர் விளையாடுவாரா? மாட்டாரா என்பதற்கான எந்த தகவலும் இல்லை. இன்று நடைபெறும் மைதானத்தில் சராசரியாக முதல் இன்னிங்ஸ் ஸ்கோர் 185 ஆக உள்ளது. அதே சமயம் முதல் இன்னிங்ஸில் குறைந்தபட்ச ஸ்கோர் 177 ஆகும். இந்த மைதானம் சேசிங் செய்வதற்கு சாதகமாக உள்ளது. எனவே டாஸ் வென்றால் முதலில் இரு கேப்டன்களும் பவுலிங் செய்ய அதிக வாய்ப்புள்ளது. இன்று இரவு 7 மணிக்கு போட்டி தொடங்குகிறது. 

இந்தியாவின் உத்ததேச பிளேயிங் 11

யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரிஷப் பந்த், சூர்யகுமார் யாதவ், ஹர்திக் பாண்டியா, ரின்கு சிங், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ்.

இலங்கை உத்ததேச பிளேயிங் 11

பதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா, குசல் மெண்டிஸ், சரித் அசலங்கா, கமிந்து மெண்டிஸ், தசுன் ஷனக, வனிந்து ஹசரங்க, துனித் வெல்லலகே, மஹீஷ் தீக்ஷன, மதீஷ பத்திரன, டில்ஷான் மதுஷங்க.

மேலும் படிக்க | உடலுறவை தடுக்க இந்த மாதிரி நடவடிக்கையா...? ஒலிம்பிக் கிராமத்தின் படுக்கைகளும் சர்ச்சையும்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News