தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்க்கு வாய்ப்பு இல்லை!

மார்ச் 12 துவங்கி 18 வரை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

Last Updated : Mar 8, 2020, 04:31 PM IST
தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு; ரோகித்க்கு வாய்ப்பு இல்லை!

மார்ச் 12 துவங்கி 18 வரை நடைபெறவுள்ள தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடருக்கான இந்தியா அணியை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஞாயிற்றுக்கிழமை அறிவித்தது.

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்தியாவின் 15 பேர் கொண்ட ஒருநாள் அணிக்கு விராட் கோலி தலைமை தாங்குவார் என சுனில் ஜோஷி தலைமையிலான ஐந்து பேர் கொண்ட தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. மேலும் இந்தியா ஆல்-ரவுண்டர் ஹார்டிக் பாண்ட்யா, தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் ஆகியோர் ஒருநாள் படைக்கு மீண்டும் திரும்பியுள்ளனர்.

  • என்றபோதிலும் ரோஹித் சர்மாவுக்கு வாய்ப்பு இல்லை.

இதற்கிடையில், துணை கேப்டன் ரோஹித் சர்மா, சர்வதேச கிரிக்கெட்டுக்கு இன்னும் தயாராக இல்லை என்று தெரிகிறது. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூசிலாந்தில் நடந்த சர்வதேச டி20 தொடரின் போது காயத்தால் வெளியேறிய ரோகித் சர்மா, அடுத்தடுத்த ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை தவறவிட்டார். இந்நிலையில் தற்போது தென்னாப்பிரிக்கவிற்கு எதிரான தொடரிலும் இருந்து விலகியுள்ளார். எனினும், மார்ச் 29 முதல் இந்தியன் பிரீமியர் லீக் (IPL 2020 -ன்) போது நட்சத்திர தொடக்க வீரர் மீண்டும் வருவார் என்று நம்புகிறார்.

சுனில் ஜோஷி தலைமையிலான புதிய தேர்வுக் குழு இந்தியா அணியைத் தேர்ந்தெடுப்பது இதுவே முதல் முறை. இந்த மாத தொடக்கத்தில் கிரிக்கெட் ஆலோசனைக் குழுவால் 5 பேர் கொண்ட குழுவில் ஜோஷி மற்றும் ஹர்விந்தர் சிங் சேர்க்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு செப்டம்பரில் பெங்களூருவில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இருந்து சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து விலகியிருந்த பாண்ட்யா 2019 அக்டோபரில் முதுகு அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார்,  இருப்பினும், பாண்ட்யா இப்போது DY பாட்டீல் டி 20 போட்டியில் தனது உடற்தகுதி மற்றும் வடிவத்தை நிரூபித்துள்ளார். இதன் மூலம் தற்போது அவர் மீண்டும் ஒருநாள் அணிக்கு திரும்பியுள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது தோள்பட்டை காயம் காரணமாக விலகியிருந்த ஷிகர் தவான், மும்பையில் நடந்த DY பாட்டீல் போட்டியில் மீண்டும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். இதன் காரணமாக அவர் தற்போது மீண்டும் ஒருநாள் படையுடன் இணைந்துள்ளார்.

அதேவேளையில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் அணிக்கு திரும்பி, முகமது ஷமி ஓய்வு அளித்துள்ளார். 

தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான தொடரில் பங்கேற்கும் இந்தியா அணி: ஷிகர் தவான், பிருத்வி ஷா, விராட் கோலி (C), கே.எல்.ராகுல், மனிஷ் பாண்டே, ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷாப் பந்த், ஹார்டிக் பாண்ட்யா, ரவீந்திர ஜடேஜா, புவனேஷ்வர் குமார், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீப் பும்ரா, நவ்பிரத் சைனி, குல்தீப் யாதவ், சுபம் கில்.

More Stories

Trending News