India vs New Zealand 3rd ODI; நியூசிலாந்துக்கு 297 ரன்கள் இலக்கு

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 297 ரன்களை அந்த அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

Last Updated : Feb 11, 2020, 11:55 AM IST
India vs New Zealand 3rd ODI; நியூசிலாந்துக்கு 297 ரன்கள் இலக்கு title=

நியூசிலாந்துக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 297 ரன்களை அந்த அணிக்கு வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி, நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட 20 ஓவர் போட்டி தொடரை இந்திய அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியது.

இந்தியா-நியூசிலாந்து அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் ஹாமில்டனில் நடந்த முதல் இரண்டு போட்டியிகளிலும் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியதுடன் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இந்த நிலையில் இந்தியா-நியூசிலாந்து அணிகள் மோதும் 3-வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி மவுன்ட்மாங்கானுவில் இன்று நடைபெற்று வருகிறது.  இந்தியாவுக்கு எதிரான 3வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனை தொடர்ந்து இந்திய அணி பேட்டிங் செய்தது.

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான பிரித்வி ஷா (40), மயங்க் அகர்வால் (1) ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து ஆடிய கோலி (9), ஸ்ரேயாஸ் (62) ரன்களில் வெளியேறினர்.  இதன்பின் கே.எல். ராகுல், மணீஷ் பாண்டேயுடன் இணைந்து அதிரடியாக விளையாடி வருகிறார். அவர் 44 ஓவர்கள் முடிவில் 96 ரன்கள் எடுத்த நிலையில் அடுத்த ஓவரை பென்னட் வீசினார்.  இதில் 2வது பந்தில் ராகுல் 2 ரன்களை எடுத்து சதம் பூர்த்தி செய்தார். 

அவர் 9 போர்கள் மற்றும் 2 சிக்சர்கள் உள்பட 112 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அதே ஓவரில் அடித்து ஆட முயன்ற மனீஷ் பாண்டே 42 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.  இறுதியில் 50 ஓவர் முடிவில் இந்திய அணி 7 விக்கெட் இழப்பிற்கு 296 ரன்கள் எடுத்தது. நியூசிலாந்து தரப்பில் ஹமிஷ் பென்னட் 4 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதையடுத்து  நியூசிலாந்து அணி களமிறங்க உள்ளது. 

Trending News