IND vs SA: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! மூன்று கேப்டன்

India tour of South Africa, 2023-24: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டிக்கு தனித்தனி கேப்டன் நியமிப்பு. இந்திய அணிக்கு யார் யார் கேப்டன்? டி20, ஒருநாள், டெஸ்ட் போட்டி நடைபெறும் நாள்கள் குறித்து பார்ப்போம்.

Written by - Shiva Murugesan | Last Updated : Nov 30, 2023, 10:05 PM IST
  • டிசம்பர் 10 முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இந்தியா விளையாடவுள்ளது.
  • ஒவ்வொரு ஃபார்மட்டிற்கும் இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன் தலைமை தாங்குவார்கள்.
  • இந்தியா ஏ அணி தென்னாப்பிரிக்கா ஏ அணிகளும் மோதவுள்ளன.
IND vs SA: தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! மூன்று கேப்டன் title=

தென்னாப்பிரிக்கா தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு: இந்திய அணி டிசம்பர் 10 ஆம் தேதி முதல் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக டி20, ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாடவுள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் பட்டியலை இன்று (நவம்பர் 30, வியாழக்கிழமை) மாலை பிசிசிஐ (Board of Control for Cricket in India) அறிவித்தது. இதில் முக்கியமான விசியம் என்னவென்றால் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான தொடரில் ஒவ்வொரு ஃபார்மட்டிற்கும் இந்திய அணிக்கு வெவ்வேறு கேப்டன் தலைமை தாங்குவார்கள்.

தென் ஆப்பிரிக்கா செல்லும் இந்திய அணி

தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணியை தேர்வு செய்ய ஆடவர் கிரிக்கெட் தேர்வுக் குழு டெல்லியில் இன்று (வியாழக்கிழமை) கூடியது. இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையேயான இந்த சுற்றுப்பயணத்தில் 3 டி20, 3 ஒருநாள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் நடைபெறவுள்ளது. இது தவிர, இந்தியா ஏ அணி தென்னாப்பிரிக்கா ஏ அணிகளும் மோதவுள்ளன.

மீண்டும் அணிக்கு திரும்பும் ரோஹித் சர்மா

இந்த சுற்றுப்பயணத்தில் இந்திய அணி ஒவ்வொரு வடிவத்திலும் வெவ்வேறு கேப்டனுடன் விளையாடும். டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் இருந்து ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு உள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் போட்டியின் போது ரோஹித் சர்மா (Rohit Sharma) மீண்டும் அணிக்கு திரும்புவார். ஒருநாள் தொடரில் கேஎல் ராகுல் கேப்டனாகவும், டி20 தொடருக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாகவும் இருப்பார்.

மேலும் படிக்க - இந்த வீரர் வந்தால் 3 முக்கிய பிரச்னைகளை தீர்ந்துவிடும்... இந்தியா தொடரையும் வெல்லும்?!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் டி20 தொடர் விவரம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக இந்திய அணி முதல் டி20 போட்டி டிசம்பர் 10 ஆம் தேதி டர்பனில் விளையாடுகிறது. இரண்டாவது டி20 போட்டி டிசம்பர் 12 ஆம் தேதி கெபெர்ஹாவிலும், மூன்றாவது டி20 போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 14 ஆம் தேதியும் நடைபெறுகிறது. 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் ஒருநாள் தொடர் விவரம்

இதையடுத்து, முதல் ஒருநாள் போட்டி ஜோகன்னஸ்பர்க்கில் டிசம்பர் 17 ஆம் தேதி நடக்கிறது. இரண்டாவது ஒருநாள் போட்டி 19 ஆம் தேதி கெபெர்ஹாவிலும், ஒருநாள் தொடரின் கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 21 ஆம் தேதி பார்லில் நடைபெறவுள்ளது. 

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா மோதும் டெஸ்ட் தொடர் விவரம்

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா (India and South Africa) மோதும் டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில் டிசம்பர் 26 ஆம் தேதி தொடங்குகிறது. இரண்டாவது டெஸ்ட் போட்டி கேப்டவுனில் ஜனவரி 3 ஆம் தேதி தொடங்குகிறது.

மேலும் படிக்க - டி20இல் தலைமை ஏற்பாரா ரோஹித்? இல்லையெனில் இவர்தான் கேப்டன்! - பிசிசிஐ பிடிவாதம்

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 போட்டிகளுக்கான இந்திய அணி

யஷஸ்வி ஜெய்ஸ்வால், ஷுப்மான் கில், ருதுராஜ் கெய்க்வாட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா (துணை கேப்டன்) , வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், முகமது சிராஜ், முகேஷ் குமார் மற்றும் தீபக் சாஹர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான ஒருநாள் போட்டிக்கான இந்திய அணி

ருதுராஜ் கெய்க்வாட், சாய் சுதர்ஷன், திலக் வர்மா, ரஜத் படிதார், ரின்கு சிங், ஷ்ரேயாஸ் ஐயர், கே.எல். ராகுல் (கேப்டன்), சஞ்சு சாம்சன் (விக்கெட் கீப்பர்), அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சாஹல், முகேஷ் குமார், முகேஷ் குமார். அவேஷ் கான், அர்ஷ்தீப் சிங் மற்றும் தீபக் சாஹர்.

தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மான் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்), ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகேஷ் சிராஜ். குமார், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா (துணை கேப்டன்) மற்றும் பிரசித் கிருஷ்ணா.

மேலும் படிக்க - பிசிசிஐயிடம் விராட் கோலி சொன்ன அந்த விஷயம்... இனி எப்போது விளையாடுவார்?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News