ஆஸி., அணி அபாரம் - 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவிப்பு!

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 313 ரன்கள் குவித்துள்ளது!

Last Updated : Mar 8, 2019, 05:59 PM IST
ஆஸி., அணி அபாரம் - 5 விக்கெட் இழப்பிற்கு 313 ரன்கள் குவிப்பு! title=

இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே நடைப்பெற்று வரும் மூன்றாவது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 313 ரன்கள் குவித்துள்ளது!

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி 2 டி20, 5 ஒருநாள் போட்டி கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. முன்னதாக டி20 தொடரை 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றிய நிலையில், தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கும் இடையேயான மூன்றவாது ஒருநாள் போட்டி ஜார்க்கண்ட் ராஞ்சியில் உள்ள JSCA மைதானத்தில் நடைப்பெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பீல்டிங் தேர்வு செய்து விளையாடிது. 

ஆஸ்திரேலியா தரப்பில் தொடக்க வீரர்களாக களமிறங்கிய அரோன் பின்ச் 93(99), உஸ்மான் காஜிவா 104(113) ரன்கள் குவித்து அணிக்கு பலம் சேர்த்தனர். இவர்களை தொடர்ந்து களமிறங்கிய வீரர்கள் அடுத்தடுத்து வெளியேற கெளன் மேக்ஸ்வெல் 47(31) ரன்கள் குவித்தார், மார்க்கஸ் 31 ரன்கள் குவித்து இறுதி நேரத்தில் அணிக்கு நம்பிக்கை அளித்தார்.

இதனையடுத்து ஆஸ்திரேலியா அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டை இழந்து 313 ரன்கள் குவித்தது. இந்தியா தரப்பில் குல்தீப் யாதவ் 3 விக்கெட்டுகளை குவித்தார்.

இதனையடுத்து 314 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா விளையாடி வருகின்றது. முன்னதாக 2 போட்டிகளில் வெற்றிப்பெற்று இத்தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கும் இந்தியா இன்றைய போட்டியில் வெற்றி பெறும்பட்சத்தில் தொடரையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News