ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மிக மோசமாக ஆடி உள்ளார். இந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் ராகுல் இரண்டு ரன்கள் மட்டும் எடுத்து அவுட் ஆனார். இரண்டாவது இன்னிங்ஸில் ரன் எதுவும் எடுக்காமல் போல்ட் ஆகி வெளியேறினார். 287 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கணக்குடன் களம் கண்ட இந்திய அணிக்கு மோசமான தொடக்கமாக அமைந்துள்ளது.
இரண்டாவது இன்னிங்ஸில் மிட்செல் ஸ்டார்க் பந்தை எதிக்கொல்வதில் கே.கே. ராகுல் குழப்பம் அடைந்தார். அவர் வீசிய பந்தை எதிர்க்கொள்ளலாமா? வேண்டாமா? என்பதை கே.கே. ராகுலால் தீர்மானிக்க முடியவில்லை. முதலில் பந்து விளையாட முயற்சி செய்தார், பின்னர் கடைசி நேரத்தில், அவர் மட்டையை அகற்றினார். ஆனால் அது தாமதமாகிவிட்டதால், பந்து மட்டையில் பட்டு உள்பக்கமாக சென்று ஸ்டெம்பில் பட்டு போல்ட் ஆனார்.
ஆஸ்திரேலிய வீரர் மைக்கேல் கிளார்க், விராத் கோஹ்லிக்கு பிறகு இந்திய அணியின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவர் கே.எல் ராகுல். அவர் கிரிக்கெட் மூன்று விதமான போட்டிகளில் பொருந்தக்கூடியவர் என கே.கே. ராகுலை குறித்து பெருமையாக சொன்னார். ஆனால் கே.கே. ராகுல், இந்திய கேப்டன் விராத் கோஹ்லியின் நம்பிக்கையோ அல்லது எதிரணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்கின் நம்பிக்கையையோ காப்பாற்றவில்லை என்பதே உண்மை. மிகவும் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், கே.கே. ராகுல் கடந்த 13 இன்னிங்ஸில் 11 தடவை எல்.பி.டபிள்யு அல்லது போல்ட் ஆகி உள்ளார். அதில் ஏழு முறை போல்ட். இதனால் கே.கே. ராகுலின் திறமை மீது கேள்வி எழுப்பட்டு வருகிறது.
Oh, what a start with the ball for the Aussies!#AUSvIND | @Toyota_Aus pic.twitter.com/9P169hJXsi
— cricket.com.au (@cricketcomau) December 17, 2018
இந்த ஆண்டு (2018) 12 டெஸ்ட் போட்டிகளில் 22 இன்னிங்சில் ஆடி 468 ரன்கள் மட்டும் எடுத்துள்ளார். அதில் ஒரு சதமும், அரை சதமும் அடங்கும். இந்த காலகட்டத்தில், அவரின் சராசரி 22.28 ஆகும். இந்த சராசரியை அவரின் திறமையுடன் (மொத்த சராசரி) ஒப்பிடும்போது மிக மோசமானவை.
26 வயதான கே.எல் ராகுல், இதுவரை 33 டெஸ்ட் ஆட்டங்களில் விளையாடியுள்ளார். அதில் 55 இன்னிங்சில் விளையாடிய அவரது சராசரி 35.77 ஆகும். அவர் டெஸ்ட் போட்டியில் 1896 ரன்கள் எடுத்துள்ளார். இதில் 5 சதமும், 11 அரை சதமும் அடங்கும்.