புவனேஷ்வர் குமார் மட்டும்தான் இருக்கிறாரா?... சுனில் கவாஸ்கர் விளாசல்

பந்துவீசுவதற்கு புவனேஷ்வர் குமார் மட்டும்தான் இருக்கிறாரா என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கேள்வி எழுப்பியுள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 13, 2022, 05:02 PM IST
  • இந்திய பௌலர்கள் மீது கவாஸ்கர் விமர்சனம்
  • நேற்றைய போட்டியில் புவனேஷ்வர் குமார் மட்டுமே சிறப்பாக பந்துவீசினார்
புவனேஷ்வர் குமார் மட்டும்தான் இருக்கிறாரா?... சுனில் கவாஸ்கர் விளாசல் title=

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென் ஆப்பிரிக்க அணி ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடுகிறது. டெல்லியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது.

இதனையடுத்து இரண்டாவது டி20 கட்டாக்கில் நேற்று நடந்தது. வெற்றி பெற்று தொடரில் தன்னை தக்கவைக்க வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி களமிறங்கியது.

India

டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச இந்தியா களமிறங்கியது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியாவின் சுமாராக இருக்க 20 ஓவர்களுக்கு 148 ரன்களை மட்டுமே எடுத்தது. 

149 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி 6 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 18ஆவது ஓவரிலேயே இலக்கை அடைந்து வெற்றி பெற்றது. 

இந்நிலையில் நேற்று அடைந்த தோல்விக்கு இந்திய அணியின் பந்துவீச்சுதான் காரணம் என ரசிகர்கள் மட்டுமின்றி முன்னாள் வீரர்களும் கூறிவருகின்றனர். முதல் போட்டியில் 211 ரன்கள் குவித்தபோது பௌலர்கள் எப்படி ரன்களை வழங்கினார்களோ அதேபோல்தான் இரண்டாவது போட்டியிலும் செயல்பட்டனர் என்ற விமர்சனமும் எழுந்துள்ளது. 

Bhuvi

அதேசமயம் புவனேஷ்வர் குமார் 4 ஓவர்கள் வீசி 13 ரன்களை மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். பொறுப்புணர்ந்து ஆடிய புவனேஷ்வருக்கு பலரும் தங்களது பாராட்டைத் தெரிவித்துவருகின்றனர்.

அந்தவகையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்தியா அடைந்த தோல்வி குறித்து பேசுகையில்,  “புவனேஷ்வர் குமாரைத் தவிர விக்கெட் வீழ்த்தும் பந்துவீச்சாளர்கள் தற்போதைய அணியில் இல்லை என்பதை முக்கியமான பிரச்னையாக பார்க்க வேண்டும். 

நீங்கள் விக்கெட்டுகளை வீழ்த்தினால் மட்டுமே, எதிரணியை அழுத்தத்திற்குள் தள்ள முடியும். இரண்டு போட்டிகளிலும், புவனேஷ்வர் குமாரைத் தவிர வேறு யாராவது விக்கெட் எடுக்கிறார்களா? மொத்தத்தில் 211 ரன்களை இந்திய அணியால் பாதுகாக்க முடியாமல் போனதற்கு இதுவே காரணம்” என்றார்.

Pant

முன்னதாக போட்டி முடிந்த பிறகு பேசிய இந்திய அணியின் கேப்டன் ரிஷப் பண்ட், “பந்து வீச்சாளர்கள் மிகவும் நன்றாக தங்களது ஆட்டத்தைத் தொடங்கினர். ஆனால் 10 ஓவர்களுக்குப் பிறகு, நன்றாகப் பந்து வீசவில்லை. அங்குதான் ஆட்டம் இந்தியாவின் கையை விட்டு போனதாக கருதுகிறேன். 

மேலும் படிக்க | ரிஷப் பந்தின் இந்த 3 தவறுகளால் இந்திய அணி தோல்வி

ஒரு அணியில் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இனி வரும் போட்டிகளில் இது போன்ற விஷயங்களை சரி செய்வோம். அதேபோல், பேட்டிங் செய்யும்போது 10 முதல் 15 ரன்கள்வரை நாங்கள் குறைவாக அடித்துவிட்டோம் என்பதுதான் உண்மை” என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News