இங்கிலாந்துக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தின் லீட்ஸ் மைதானத்தில் இன்று துவங்கியது. நீண்ட நாட்களுக்கு பிறகு டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார். பேட்டிங்கிற்கு சாதகமாக இருக்கும் என்று எண்ணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணிக்கு ஆரம்பத்திலிருந்து அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க ஆட்டக்காரர் கே.எல் ராகுல் முதல் இரண்டு ஓவர்களில் ரன் எதுவும் இன்றி ஆட்டமிழந்து வெளியேறினார். அதன்பின் புஜாரா இன்றைய போட்டியில் தன் பழைய பார்மிர்க்கு திரும்புவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு ரன்களுக்கு வெளியேறினார். கடந்த 50 இன்னிங்ஸ் க்கும் மேலாக சதம் அடிக்காத விராட் கோலி இன்றைய போட்டியில் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 7 ரன்களில் வெளியேறினார். அதற்குப் பின் சிறிது நேரம் நிதானமாக ஆடிய அஜின்கியா ரகானே 18 ரன்களில் ஆட்டமிழந்தார். இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் அனைவரும் விக்கெட் கீப்பர் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆகி பெவிலியன் திரும்பினர்.
முதல் இரண்டு டெஸ்டில் ரன்கள் அடிக்க தவறிய ரிஷப் பண்ட் இந்த போட்டியிலும் 2 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் தாக்கு பிடித்த ரோகித் சர்மா 105 பந்துகளில் 19 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். அதன் பிறகு களமிறங்கிய ரவீந்திர ஜடேஜா (4), ஷாமி(0),பும்ரா(0), சிராஜ்(3) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். இந்திய அணி 40.4 ஓவர்களில் 78 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது.
ALSO READ WTC: 14 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தது இந்திய அணி!
இங்கிலாந்து சிறப்பாக பந்து வீசி இந்திய அணியின் விக்கெட்டுகளை அடுத்தடுத்து எடுத்தனர். ஆண்டர்சன் 3 விக்கெட்டுகளும்,ராபின்சன் மற்றும் சாம்கரன் தலா 2 விக்கெட்டுகளும், ஓவர்டன் 3 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளனர். இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் விக்கெட்களை இந்திய பவுலர்கள் வேகமாக எடுக்க தவறும்பட்சத்தில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி எளிதில் வெல்ல அதிக வாய்ப்புள்ளது.
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR