INDvsSA: பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் முதல் ஒருநாள்!

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் இன்று(பிப்.,1) டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெறுகிறது!

Last Updated : Feb 1, 2018, 12:30 AM IST
INDvsSA: பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் முதல் ஒருநாள்! title=

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் முதல் ஒருநாள் இன்று(பிப்.,1) டர்பன் கிங்ஸ்மேட் மைதானத்தில் நடைப்பெறுகிறது!

தென்னாப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி, மூன்று டெஸ்ட், ஆறு ஒருநாள் மற்றும் மூன்று டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது.

முன்னதாக தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் 2-1 என்ற கணக்கில் கோப்பையை இழந்தது இந்திய அணி.

இந்நிலையில் இன்று துவங்கும், ஆறு ஒருநாள் போட்டி கொண்ட தொடர் இந்தியாவிற்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது. இழந்த பெயரை மீட்டெடுக்க இந்தியாவும், விட்டுக்கொடுக்காமல் தென்னாப்பிரிக்காவும் விளையாட கடும் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா இடையிலான ஒருநாள் போட்டி மிகவும் சுவாரசியமாக இருக்க வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது சர்வதேச ஒருநாள் தரவரிசை பட்டியலில் 120 புள்ளிகளுடன் முதலிடத்தில் தென் ஆப்ரிக்கா அணியும், 119 புள்ளிகளுடன் 2_வது இடத்தில் இந்திய அணியும் உள்ளது. 

ICC தரவரிசை பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேற வேண்டும் என்றால் இந்திய அணி 4-2 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வெல்ல வேண்டும். 

இந்நிலையில் தென்னாப்பிரிக்க அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் ஏபிடி வில்லியர்ஸ் காயம் காரணமாக முதல் 3 ஒரு நாள் போட்டிகளில் இருந்து விலகியுள்ளார்.

பல எதிர்பார்ப்புகளுக்கு இடையில் இன்று டர்பன் மைதானத்தில் முதல் ஒருநாள் போட்டி நடைபெறவுள்ளது!

Trending News