RCBvsKKR: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பவுலிங் தேர்வு

இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஐபிஎல் ஆட்டத்தில் பெங்களூர் மற்றும் கொல்கத்தா அணிகள் மோதுகின்றனர்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Apr 5, 2019, 08:03 PM IST
RCBvsKKR: டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முதலில் பவுலிங் தேர்வு title=

19:36 05-04-2019
இன்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதும் ஆட்டத்தில் கொல்கத்தா அணி டாஸ் வென்று முதலில் பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. இன்னும் சற்று நேரத்தில் ஆட்டம் ஆரம்பமாக உள்ளது.

 

 


ஐபிஎல் தொடரின் 12வது சீசன் கடந்த 23 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. மொத்தம் எட்டு அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரின் 16-வது லீக் ஆட்டம் நேற்று முடிந்தது. அதில் டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும்  சன்ரைசஸ் ஐதராபாத் அணிகள் மோதின. அந்த ஆட்டத்தில் ஐதராபாத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று IPL 2019 புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்தது.

இன்று 17வது லீக் ஆட்டம் பெங்களூரு எம்.சின்னஸ்வாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதில் விராட் தலைமையிலான பெங்களூரு அணி இதுவரை ஆடிய நான்கு போட்டிகளிலும் தோல்வியை தழுவியுள்ளது. ஐபிஎல் புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. முதல் போட்டியில் சென்னையிடமும், இரண்டாது போட்டியில் ஹைதராபாத்திடமும், மூன்றாவது போட்டியில் மும்பையிடமும், நான்காவது ராஜஸ்தான் அணியிடமும் தோற்றது. 

இந்த நான்கு போட்டியில் பெங்களூரு தோற்றத்துக்கு முக்கிய காரணம் பேட்டிங்கில் வீரர்கள் தங்கள் செயல்திறனை காட்டவே இல்லை. அதேபோல பந்து வீச்சை பொறுத்தவரையிலும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு யாரும் சரியாக செயல்படவில்லை. இன்று ஐந்தாவது போட்டியை எதிர்க்கொள்ளும் பெங்களூரு அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இல்லையென்றால் 12வது ஐபிஎல் சீசனின் அடுத்த சுற்றுக்கு முன்னேறுவது மிகவும் கடினமாகும்.

தினேஷ் கார்த்திக் தலைமையிலான கொல்கத்தா அணி, இதுவரை மூன்று போட்டிகளில் விளையாடி உள்ளது. முதல் இரண்டு போட்டியில் வெற்றியும், ஒரு போட்டியில் தோல்வியும் பெற்று புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. டெல்லி அணியிடம் சூப்பர் ஓவரில் கொல்கத்தா அணி தோற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Trending News