IPL 2020: KXIP அணி தோல்வியினால் மனம் உடைந்த Preity Zinta; அம்பயர் தவறு என கோபம் ..!!!

நேற்று நடந்த துபாய் சர்வதேச அரங்கில் நடந்த விறுவிறுப்பான IPL 2020 போட்டியில், டில்லி கேபிடல்ஸ் அணி (Delhi Capitals ) கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியை (kings XI punjab) தோற்கடித்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Sep 21, 2020, 10:14 AM IST
  • நேற்று நடந்த துபாய் சர்வதேச அரங்கில் நடந்த விறுவிறுப்பான IPL 2020 போட்டியில், டில்லி கேபிடல்ஸ் அணி (Delhi Capitals ) கிங்க்ஸ் XI பஞ்சாப் அணியை (kings XI punjab) தோற்கடித்தது.
  • 19வது ஓவரில் ரபாடாவின் பந்தை அடித்த அகர்வால், இரு ரன்களை எடுத்தார்.
  • ஆனால் அம்பயர் நிதின் மேனன், முதலில் எடுத்த ரன் ஷார்ட் ரன் என முடிவு எடுத்து விட்டார்.
IPL 2020: KXIP அணி தோல்வியினால் மனம் உடைந்த Preity Zinta; அம்பயர் தவறு என கோபம் ..!!! title=

IPL 2020 தொடரின் இரண்டாவது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 157 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணி வெற்றி பெற 158 ரன்கள் தேவை என்ற இலக்குடன் களம் இறங்கிய பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 157 ரன்கள் மட்டும் எடுத்ததால், இன்றைய போட்டி டை ஆன நிலையில் சூப்பர் ஓவர் தேவை எழுந்தது. இதை அடுத்து  IPL 2020 தொடரின் முதல் சூப்பர் ஓவரில் பஞ்சாப் அணி (KXIP) மூன்று ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து ஆடிய டெல்லி கேபிடல்ஸ் அணி ( Delhi capitals) இரண்டு பந்துகளிலேயே வெற்றி கனியை பறித்து சென்றது.  

இந்நிலையில், 19வது ஓவரில் அம்பயரின் சர்சைக்குரிய முடிவினால் தான் பஞ்சாப் அணி தோற்றது என்றும், சூப்பர் ஓவரின் தேவையே எழுந்திருக்காது எனவும் சமூக ஊடகங்களில் நெட்டிஸன்கள் பல கேள்விகளை எழுப்பினர்.

19வது ஓவரில் ரபாடாவின் பந்தை அடித்த அகர்வால், இரு ரன்களை எடுத்தார். ஆனால் அம்பயர் நிதின் மேனன், முதலில் எடுத்த ரன் ஷார்ட் ரன் என முடிவு எடுத்து விட்டார். ஆனால், அந்த ரன் ஷாட் ரன் அல்ல என ரீப்ளேயில் தெளிவாக தெரிந்தது. 

கொரோனா நெருக்கடியில் குவாரண்டைன், கொரோனா பரிசோதனை என அனைத்து கட்டத்தையும் தாண்டி உற்சாகத்துடன் வந்த என்னை, இந்த ஒரு ஷார்ட் ரன் மோசமாக பாதித்து விட்டது என ப்ரீதி ஜிண்டா ட்வீட் செய்துள்ளார்.

 

வீரேந்திர ஷேவாக்கும் இது ஷார்ட் ரன் அல்ல என கூறியுள்ளார்.

 

ALSO READ | DC vs KXIP: Super Over மூலம் IPL 2020 தொடரில் முதல் வெற்றியை பதிவு செய்த Delhi Capitals

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

 Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR 

Trending News