IPL 2021, CSK vs DC: IPL 2021 தொடரின் இரண்டாவது ஆட்டத்தில் இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீச முடிவெடுத்தது.
IPL 2020-ல் சென்னை அணியின் தோல்வியால் பெரும் ஏமாறத்தை அடைந்த CSK ரசிகர்கள் இந்த ஆண்டு தங்கள் அணி வழக்கமான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தும் என்ற எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் நிலையில், இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 188 ரன்கள் எடுத்து தில்லி கேபிடல்ஸ் அணிக்கு 189 ரன்கள் என்ற வெற்றி இலக்கை நிர்ணயித்துள்ளது.
சுரேஷ் ரய்னா 54 ரன்கள் எடுத்தார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தோனி, ரன்கள் ஏதும் எடுக்காமல் டக் அவுட் ஆனார்.
கடந்த ஆண்டு IPL-ல் தனது கடைசி போட்டியில் ஆடிய தோனி (MS Dhoni), அது தன்னுடைய கடைசி மேட்ச் அல்ல என்பதை அப்போதே தெளிவுபடுத்தினார். அது அவரது ரசிகர்களுக்கு மிகுந்த நம்பிக்கையையும் மகிழ்ச்சியையும் அளித்தது.
கடந்த ஆண்டு, IPL வரலாற்றிலேயே முதன் முறையாக சென்னை அணி ப்ளே-ஆஃபிற்கு தகுதி பெறாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது. மூன்று முறை சாம்பியன்களான CSK இந்த முறை தங்கள் தவறுகளை திருத்திக்கொண்டு மீண்டும் அதிரடியாக களமிறங்க முழு முனைப்புடன் உள்ளது.
IPL வரலாற்றில் மிக வெற்றிகரமான கேப்டன்களில் ஒருவரான தோனி 204 IPL போட்டிகளில் 4632 ரன்கள் எடுத்துள்ளார்.
முன்னதாக, டெல்லி கேப்பிடல்சுக்கு எதிரான தங்களது முதல் ஆட்டத்திற்காக சென்னை வீரர்கள் கடுமையான பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். வான்கடே மைதானத்தில் வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ள சென்னை வீரர்கள் மிகுந்த உற்சாகத்துடன் காணப்பட்டனர்.
ALSO READ | பும்ராவிற்காக நீல நிற உடை அணிந்த சஞ்சனா கணேசன்; True Love என ரசிகர்கள் பாராட்டு
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR