பார்மிற்கு திரும்பிய மும்பை! குஜராத்தை வீழ்த்தி வெற்றி!

குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அசத்தல் வெற்றி பெற்றுள்ளது.  

Written by - RK Spark | Last Updated : May 6, 2022, 11:30 PM IST
பார்மிற்கு திரும்பிய மும்பை! குஜராத்தை வீழ்த்தி வெற்றி! title=

ஐபிஎல் 2022-ன் இன்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் விளையாடியது.  மும்பை மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.  புள்ளி பட்டியலில் முதல் இடத்தில் உள்ள குஜராத் அணியும், கடைசி இடத்தில் உள்ள மும்பை அணியும் இன்று மோதியது.  மும்பை அணி இந்த சீசனில் விளையாடிய 8 போட்டிகளில் தோல்வியை தழுவி, ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருந்தது.  இதனால் மீதமுள்ள போட்டியில் வெற்றி பெற கடுமையாக போராடி வருகிறது.

 

மேலும் படிக்க | சன்ரைசர்ஸூக்கு எதிராக வரலாறு படைத்த வார்னர் - அகில உலக சாதனை

முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்புடன் களமிறங்கியது.  கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினர்.  இஷான் 45 ரன்களும், ரோஹித் 43 ரன்களும் குவித்தனர்.  சூரியகுமார் யாதவ், திலக் வர்மா சிறிது ரன்கள் அடித்து அவுட் ஆகா, கடைசியில் டிம் டேவிட் பேட்டிங்கில் அதிரடி காட்டினார்.  21 பந்தில் 4 சிஸ்சர்கள் உட்பட 44 ரன்களை குவித்தார். இதனால் 20 ஓவர் முடிவில் மும்பை அணி 6 விக்கெட்களை இழந்து 177 ரன்களை குவித்தது.  

 

அடிக்கக்கூடிய இலக்கை எதிர்த்து ஆடிய குஜராத் அணிக்கு ஆரம்பமே அசத்தலாக இருந்தது.  சஹா மற்றும் கில் சிறப்பாக விளையாடி ரன்களை சேர்த்தனர்.  முதல் விக்கெட்டிற்கு 100 ரன்கள் பாட்னர்ஷிப் அடித்தனர்.  சஹா 55 ரன்களுக்கும், கில் 52 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர்.  கேப்டன் ஹர்திக் பாண்டியா 24 ரன்கள் அடித்து இருந்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.  சாய் சுதர்சன் ஹிட் அவுட் ஆகா, குஜராத் பக்கம் இருந்த போட்டி மெல்ல மும்பை அணியின் பக்கம் திரும்பியது.  கடைசி ஓவரில் வெற்றிக்கு 9 ரன்கள் தேவைப்பட்ட நிலையில் டேனியல் சாம்ஸ் சிறப்பாக பந்து வீசினார்.  20 ஓவரில் வெறும் 3 ரன்களை மட்டுமே விட்டு கொடுத்து மும்பை அணியை வெற்றி பெற செய்தார்.  இந்த போட்டியில் மும்பை அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  

 

மேலும் படிக்க | கலங்கி நிற்கும் மும்பைக்கு அடி கொடுக்க காத்திருக்கும் குஜராத் - பாண்டியாவின் பலே பிளான்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News