IPL 2022: புதிதாக இணைந்தன 2 புதிய அணிகள், ஏலத் தொகை தலை சுற்ற வைக்கும்!!

அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளும் ஐ.பி.எல் லீக்கில் இணைந்துள்ள நிலையில், அடுத்த சீசனில் இருந்து பத்து அணிகள் இந்த லீகில் பங்கேற்கும்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 26, 2021, 10:59 AM IST
  • IPL 2022 பத்து அணிகளுடன் களைகட்டவுள்ளது.
  • 2 அணிகளுக்கான ஏலம் நேற்று துபாயில் நடந்தது.
  • அகமதாபாத் மற்றும் லக்னோ புதிதாக இணைந்துள்ள இரண்டு அணிகளாகும்.
IPL 2022: புதிதாக இணைந்தன 2 புதிய அணிகள், ஏலத் தொகை தலை சுற்ற வைக்கும்!! title=

IPL 2022: ஐபிஎல்லின் அடுத்த பதிப்பில் இரண்டு புதிய கார்ப்பரேட்டுகள் புதிய அணிகளுடன் லீக்கிற்குள் நுழையவுள்ளனர். அகமதாபாத் மற்றும் லக்னோ அணிகளும் ஐ.பி.எல் லீக்கில் இணைந்துள்ள நிலையில், அடுத்த சீசனில் இருந்து பத்து அணிகள் இந்த லீகில் பங்கேற்கும்.

துபாயில் (Dubai) உள்ள தாஜ் ஹோட்டலில் திங்கள்கிழமை (அக்டோபர் 25) இதற்கான ஏலம் நடந்தது. ஆர்பி-சஞ்சீவ் கோயங்கா குழுமம் (RPSG) (லக்னோ) மற்றும் சிவிசி கேப்பிட்டல் பார்ட்னர்ஸ் (அகமதாபாத்) ஆகியவை புதிய அணி உரிமையாளர்களாக இந்த லீக்கில் இணந்துள்ளதாக பிசிசிஐ உறுதி செய்தது.

RPSG குழுமம் லக்னோ அணிக்கான ஏலத் தொகையாக  ரூ.7,090 கோடியை செலுத்தியது. சிவிசி அகமதாபாத் அணியை ரூ.5,625 கோடிக்கு வாங்கியது.

ஆரம்பத்தில் இருந்தே, ஐபிஎல் (IPL) ணிகள் இந்தியா இன்க் நிறுவனங்களுக்குச் சொந்தமானவையாக இருந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் புதிதாக இணைந்துள்ள இரு நிறுவனங்களும் பணபலம் மிக்க நிறுவனங்களாக அறியப்படுவதால், ஐ.பி.எல்-லின் மதிப்பு இன்னும் கூடியுள்ளது என்றே கூறலாம்.

லக்னோ அணியின் புதிய உரிமையாளர் RPSG குழுமம் ஆகும். இது 2011 இல் அதன் தற்போதைய வடிவத்தில் நிறுவப்பட்டது. இந்த குழுமம், பவர், கார்பன் பிளாக், ITES, நுகர்வோர் சில்லறை விற்பனை, ஊடகம் மற்றும் பொழுதுபோக்கு, விளையாட்டு, கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் வேளான் ஆகிய துறைகளில் வணிகங்கள் உள்ளன.

ALSO READ: தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஒன் அண்ட் ஒன்லி ‘தல’ தோனி! 

மார்ச் 31, 2021 நிலவரப்படி இந்த குழுமத்தின் வருவாய் ரூ.26,634 கோடி மற்றும் மொத்த சொத்து மதிப்பு ரூ.47,400 கோடி ஆகும்.

மறுபுறம், தனியார் ஈக்விடி நிறுவனமான CVC 1981 இல் நிறுவப்பட்டது. சுமார் 125 பில்லியன் டாலர் (சுமார் ரூ. 94 டிரில்லியன்) மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டுள்ளது.

CVC இன் பிரைவேட் ஈக்விட்டி தளம் 97 பில்லியன் டாலர் சொத்துக்களை நிர்வகிக்கிறது. நிறுவனத்தின் கிரெடிட் தளம் 29 பில்லியன் டாலர் AUM ஐ நிர்வகிக்கிறது.

இந்த நிறுவனம் முக்கியமாக ஊழியர்களுக்கு சொந்தமாக உள்ளது. நிர்வாக கூட்டாளர்களால் வழிநடத்தப்படுகிறது.

இதற்கிடையில், ITT ஆவணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி இந்த புதிய ஏலதாரர்கள் ஏலத்திற்குப் பிந்தைய செயல்முறைகளை முடிப்பதற்கு உட்பட்டு, புதிய உரிமையாளர்கள் 2022 சீசனில் இருந்து IPL இல் பங்கேற்பார்கள். ஐபிஎல் 2022 சீசன் பத்து அணிகளை உள்ளடக்கி 74 போட்டிகளைக் கொண்டிருக்கும். இதில் ஒவ்வொரு அணியும் 7 போட்டிகளை சொந்த மைதானங்களிலும் 7 போட்டிகளை மற்ற மைதானங்களிலும் விளையாடும்.

இந்தியன் பிரீமியர் லீக்கின் 15வது பதிப்பான ஐபிஎல் 2022க்கான (IPL 2022) மெகா ஏலம் இந்த ஆண்டு இறுதியில் டிசம்பரில் நடைபெறும்.

ALSO READ: சிஎஸ்கே அணி Retention செய்ய போகும் வீரர்கள்! கசிந்த தகவல்! 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News