தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஒன் அண்ட் ஒன்லி ‘தல’ தோனி!

ஐபிஎல் கோப்பையுடன் தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் தல தோனி  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Oct 18, 2021, 04:49 PM IST
  • ஐ.பி.எல் 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியை வென்று கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியது
  • தற்போது தோனி இந்திய அணியின் ஆலோசகராக அணியில் இணைந்தார்
தளபதி மு.க.ஸ்டாலினை சந்திக்கிறார் ஒன் அண்ட் ஒன்லி ‘தல’ தோனி! title=

ஐபிஎல் 2021ல் சென்னை அணி இறுதி போட்டியில் கொல்கத்தா அணியை வீழ்த்தி கோப்பையை வென்றது.  அதன்பின் இந்த வருடத்துடன் சென்னை அணியை விட்டு செல்ல உள்ளீர்கள் என்றவுடன் "Still I haven't left behind" என்று தெரிவித்தார் தோனி.

ஐ.பி.எல் 2021ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதி போட்டியை வென்று கோப்பையை 4வது முறையாக கைப்பற்றியுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக இயக்குனர் கே.எஸ் விஸ்வநாதன் ஐ.பி.எல் கோப்பையை தி.நகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்தார்.  

ALSO READ ஐபிஎல் 2021ல் மேட்சை மாற்றிய 5 பவுலர்கள்!

அதன்பின் சீனிவாசன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.  அதில் அவர் கூறியதாவது, டி20 உலகக் கோப்பை முடித்த பின்னர் தோனி, ஐபிஎல் கோப்பையை முதலமைச்சரிடம் காண்பித்து சந்தித்து வாழ்த்து பெறவுள்ளார்.  ஐபிஎல் கோப்பை வென்றதை கொண்டாடும் விதமாக சிதம்பரம் ஸ்டேடியத்தில் விழா நடத்தப்பட உள்ளது.  தோனி இல்லாமல் சிஎஸ்கே இல்லை...! சிஎஸ்கே இல்லாமல் தோனி இல்லை...! என்று தெரிவித்தார்.

dhoni

தற்போது தோனி இந்திய அணியின் ஆலோசகராக அணியில் இணைந்தார்.  நேற்று அணியுடன் அவர் பயிற்சியில் ஈடுபடும் புகைப்படங்கள் வெளியாகி வைரல் ஆனது.  வரும் 24ம் தேதி பாகிஸ்தான் அணிக்கெதிரான தனது முதல் போட்டியில் விளையாட உள்ளது இந்திய அணி. 

ஐசிசி டி 20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கேஎல் ராகுல், சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன், ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ராகுல் சாஹர், ரவிச்சந்திரன் அஷ்வின் , ஷர்துல் தாக்கூர், வருண் சக்கரவர்த்தி, ஜஸ்பிரித் பும்ரா, புவனேஷ்வர் குமார், முகமது ஷமி

கூடுதல் வீரர்கள்: ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் சாஹர், அக்ஸர் படேல்

ALSO READ ஆலோசகராக தோனி: விராட் கோலியின் கருத்து என்ன?

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News