சென்னையில் நாளை தொடங்கும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை - எப்படி வாங்குவது?

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கும் நிலையில், பார்வையாளர்களுக்காக கூடுதல் வசதி செய்யப்பட்டுள்ளது. ஆன்லைன் வழியாகவும் டிக்கெட் வாங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.  

Written by - S.Karthikeyan | Last Updated : Apr 17, 2023, 07:25 AM IST
சென்னையில் நாளை தொடங்கும் ஐபிஎல் டிக்கெட் விற்பனை - எப்படி வாங்குவது? title=

சிஎஸ்கே - சன்ரைசர்ஸ் மோதல்

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையிலான போட்டி ஏப்ரல் 21 ஆம் தேதி நடைபெறுகிறது. இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. இதனையொட்டி டிக்கெட் விற்பனைக்காக விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணிக்கு டிக்கெட் விற்பனை தொடங்க இருக்கிறது. ரசிகர்கள் நேரடியாக சென்று பெற்றுக் கொள்ளலாம். 

மேலும் படிக்க | IPL 2023 MI vs KKR: மைதானத்தில் நிதிஷ் ராணா - சோகீன் வாக்குவாதம்... பிரச்னையின் பின்னணி என்ன?
 
சேப்பாக்கத்தில் டிக்கெட் விலை

சேப்பாக்கம் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் உள்ள இரு கவுண்ட்டர்களில் சி, டி, இ கீழ்தளங்களுக்கான டிக்கெட்டுகளுக்கு ரூ.1,500 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.2,000, ரூ.2,500 என நிர்ணயிக்கப்பட்டுள்ள டிக்கெட்டுகளை சேப்பாக்கத்தில் இருக்கும் டிக்கெட் கவுண்ட்டரிலும், PAYTM மற்றும் www.insider.in ஆகிய இணையதளங்களிலும் ஆன்லைன் மூலம் வாங்கிக் கொள்ளலாம்.

டிக்கெட் சர்ச்சை

சேப்பாக்கம் மைதானத்தில் டிக்கெட் விற்பனையில் குளறுபடிகள் நடைபெற்றிருப்பதாக குற்றச்சாடுகள் எழுந்தன. அங்கு நடைபெற்ற கடந்த 2 போட்டிகளுக்கும் டிக்கெட் விற்பனை முடிந்துவிட்டதாக கூறிய நிலையில் மேட்ச் நடைபெறும்போது கேலரிகள் காலியாக இருந்தன. இது ரசிகர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தியது. நேரடியாக டிக்கெட் வாங்கவந்தவர்களுக்கு டிக்கெட் இல்லை என கூறியவர்கள், இப்போது கேலரிகள் காலியாக இருப்பதற்கு என்ன பதில் சொல்லப்போகிறார்கள்? என்றும் சிஎஸ்கே ரசிகர்கள் கேள்வி  எழுப்பினர். ஸ்பான்சர்கள் மற்றும் கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பதற்காக டிக்கெட்டுகள் கொடுக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்தது. 

சிஎஸ்கே ஏற்பாடு

இதனைத் தொடர்ந்து இந்த முறை கூடுதல் கேலரிகளை ரசிகர்களுக்காக சிஎஸ்கே நிர்வாகம் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் கூடுதல் டிக்கெட்டுகள் ரசிகர்களுக்கு கிடைக்கும். சி, டி, இ மற்றும் கலைஞர் கருணாநிதி பெவிலியன் ஆகியவற்றிலும் ரசிகர்கள் அமர்ந்து கிரிக்கெட் பார்க்கலாம். நேரடியாக கவுண்டர்களில் விற்பனை செய்யும் டிக்கெட்டுகளின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதால், நாளை சேப்பாக்கத்தில் கூடுதல் ரசிகர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

மேலும் படிக்க | IPL 2023: சாம்பியன்ஸை பழிதீர்த்து முதலிடத்திற்கு முன்னேறிய ராஜஸ்தான்... சாம்சன், ஹெட்மயர் மிரட்டல்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News