இந்தியா மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் கிரிக்கெட் டெல்லி பெரோஸ் ஷா கோட்லா மைதானத்தில் நேற்று, தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த இந்திய அணி முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 90 ஓவர்களுக்க 4 விக்கெட் இழந்து 371 ரன்கள் எடுத்தது. கோலி 156(186) மற்றும் ரோகித் சர்மா 6(14) ரன்களுடன் களத்தில் இருந்தனர்.
இதனையடுத்து இரண்டாம் நாள் ஆட்டம் இன்று தொடர்ந்த நிலையில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்களை குவித்தனர். ஆட்டத்தின் 108-வது ஓவரில் விராட் கோலி 238 பந்துகளில் இரட்டை சதம் அடித்தார்.
இதுவரை இவர் 6 இரட்டை சதங்களை அடித்துள்ளார். குறிப்பாக 2017-ஆம் ஆண்டில் இது இவரது மூன்றாவது இரட்டை சதமாகும். இதனால் டெஸ்ட் போட்டிகளில் கேப்டனாக அதிக முறை இரட்டை சதம் அடித்தவர் எனும் சாதனையை விராட் கோலி படைத்துள்ளார்.
Last Sunday: double century!
This Sunday: double century!@imVkohli has reached 200 in back to back Test innings against Sri Lanka! Simply outstanding! #INDvSL pic.twitter.com/RaRQ6RMoEP— ICC (@ICC) December 3, 2017
இதற்கு முன்னதாக, மே.இ தீவுகள் அணியின் முன்னால் கேப்டனாக பிரைன் லாரா 5 முறை இரட்டை சதம் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது இச்சாதனையை கோலி முறியடித்துள்ளார்.