BWF உலக பேட்மிண்டன் தொடர் இறுதி போட்டியில் வென்று சாம்பியன் பட்டம் வென்றதன் மூலம், மேட்மிண்டன் தரவரிசை பட்டியலில் சிந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்!
ரியோ ஒலிம்பிங்க வெள்ளி பதக்கம் வென்ற இந்திய வீரங்கனை பி.வி.சிந்து., கடந்த டிசம்பர் 16-ஆம் நாள் நடைப்பெற்ற BWF உலக பேட்மிண்டன் இறுதி போட்டியில் ஜப்பானின் நொசோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இப்போட்டில் சிந்து வெற்றி பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
2018-ம் ஆண்டிற்கான BWF உலக பேட்மிண்டன் தொடர் சீனாவில் நடைப்பெற்றது. இத்தொடரின் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய வீராங்கனை பி.வி சிந்து, உலகின் இரண்டாம் நிலை வீராங்கனையான ஜப்பானின் நொசோமி ஓகுஹாராவை எதிர்கொண்டார். பரபரப்பாக சென்ற இந்த ஆட்டதிதல் பி.வி சிந்து 21-19, 21-17 என்ற நேர் செட் கணக்கில் வெற்றிப்பெற்று சாம்பியன் பட்டம் வென்றார்.
கடந்த சில தொடர்களாக இறுதி போட்டிகளில் கோட்டைவிட்டு வந்த பிவி சிந்து, இந்த வெற்றியின் மூலம் இறுதி போட்டி தோல்விகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் இந்த போட்டியின் வெற்றியின் மூலம் BWF உலக தரவரிசை பட்டியலில் சிந்து 3 இடங்கள் முன்னேறி 3-வது இடம் பிடித்துள்ளார்.
இந்த தரவரிசை பட்டியலில் சீன தைய்பி வீராங்கனை தாய் தூ யிங் 100267 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார். இவரைத் தொடர்ந்து ஜப்பானின் நொசோமி 85,907 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், இந்திய வீராங்கனை PV சிந்து 84,264 புள்ளிகளுடன் 3-ஆம் இடத்திலும் உள்ளனர். மற்றொரு இந்திய வீரங்கனை சாய்னா நேவால் 64,914 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளார்.