ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் எனத் தகவல்

இந்திய தலைமை பயிற்சியாளரின் மேற்பார்வையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் போது, ​​மாற்றத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும்.

Written by - Shiva Murugesan | Last Updated : Aug 6, 2019, 07:36 PM IST
ரவி சாஸ்திரி மீண்டும் இந்திய அணியின் பயிற்சியாளராகிறார் எனத் தகவல் title=

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரைத் தேர்வுசெய்யுமாறு நிர்வாகிகள் குழு (CoA) நியமித்த கிரிக்கெட் ஆலோசனைக் குழு (CAC) எந்தவொரு வெளிநாட்டினரையும் இந்த பதவிக்கு தேர்ந்தெடுப்பதற்கு முகாந்தரம் இல்லை எனக் கூறியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது. அத்தகைய சூழ்நிலையில், ரவி சாஸ்திரி மீண்டும் நியமிக்கப்படுவது குறித்து பரிசீலிக்கப்படுகிறது எனத்தகவல்.

ஐ.ஏ.என்.எஸ் செய்தி ஊடகத்திடம் பேசிய சிஏசி உறுப்பினர், ரவி சாஸ்திரி மேற்பார்வையில் அணி சிறப்பாக செயல்படுகிறது என்று கூறியுள்ளார். இதைவைத்து பார்க்கும் போது, இத்தகைய சூழ்நிலையில், கேப்டன் விராட் கோலி தலைமையிலான இந்திய அணிக்கு ரவி சாஸ்திரி மீண்டும் பயிற்சி அளிப்பார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.

சிஏசி உறுப்பினர் கூறியது "நாங்கள் வெளிநாட்டு பயிற்சியாளர்களை நியமிக்க ஆர்வமாக இல்லை" என்று கூறினார். ஆனால் கேரி கிர்ஸ்டன் போன்ற ஒருவர் இந்தப் பதவிக்கு விண்ணப்பித்திருந்தால் நாங்கள் அதைக் கருத்தில் கொண்டிருப்போம். எங்களை பொறுத்த வரை எப்பொழுதும் இந்திய பயிற்சியாளர்களுக்கு முன்னுரிமை உள்ளது. தற்போது இந்திய தலைமை பயிற்சியாளரின் மேற்பார்வையில் இந்திய அணி சிறப்பாக செயல்படும் போது, ​​மாற்றத்தைப் பற்றி ஏன் சிந்திக்க வேண்டும். இந்த சூழ்நிலையில் ரவி சாஸ்திரியிடம் மீண்டும் இந்திய அணியின் பயிர்ச்சியாளர் பதவியை ஒப்படைக்கப்பட வேண்டும் எனக் கூறினார்.

பிசிசிஐ மூத்த அதிகாரி ஒருவர் சமீபத்தில், ரவி சாஸ்திரி பயிற்சியாளராக தொடர வேண்டியது அவசியம், ஏனெனில் அணி ஒரு மாற்றத்தை நோக்கி செல்கிறது எனக் கூறியிருந்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் நியமனம் தொடர்பான இறுதி முடிவு சி.ஏ.சி.யின் ஆலோசனையின் பின்னர் முழுமையாக எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News