தோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா: கேப்டனாக சாதனை, பேட்ஸ்மனாக சோகம்

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை இரண்டுக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் கைப்பற்றிய இந்திய அணிக்கு கேப்டன் ரோகித் சர்மா முக்கிய பங்கு வகித்தார். இந்த தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் திரும்பினார்.  

Written by - S.Karthikeyan | Last Updated : Jan 15, 2024, 12:21 PM IST
  • ரோகித் சர்மாவின் புதிய சாதனை
  • 20 ஓவர் கிரிக்கெட்டில் அதிக வெற்றி
  • கேப்டனாக தோனியின் சாதனை சமன்
தோனி சாதனையை சமன் செய்த ரோகித் சர்மா: கேப்டனாக சாதனை, பேட்ஸ்மனாக சோகம் title=

20 ஓவர் தொடரில் கேப்டனாக 41 வெற்றிகளைப் பெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளைப் பெற்ற இந்திய கேப்டன் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன் 72 போட்டிகளில் 41 வெற்றிகளைப் பெற்றிருந்த எம்எஸ் தோனியின் சாதனையை ரோகித் சர்மா சமன் செய்தார். இதேபோல், இந்த தொடரில் 12 தொடர் வெற்றிகளைப் பெற்ற ரோகித் சர்மா, சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக தொடர் வெற்றிகளைப் பெற்ற கேப்டன் என்ற புதிய சாதனையையும் படைத்தார்.

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான டி20 தொடரை முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று இந்திய அணி கைப்பற்றியது. இந்த தொடரில் 14 மாதங்களுக்குப் பிறகு கேப்டனாக டி20 அணியில் ரோகித் சர்மா திரும்பி இருந்தார். அவரின் தலைமையில் இந்திய அணி இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது இந்தியா. 2024 டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் பயணத்தில் வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த தொடரில் கேப்டனாக சாதனைகள் படைத்துள்ள ரோகித் சர்மா, டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மனாக தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார்.

மேலும் படிக்க | ரவிச்சந்திரன் அஷ்வின் இடம் பெறத் தகுதியற்றவர் - யுவராஜ் சிங் பேச்சு!

கேப்டனாக சாதனை

ரோகித் சர்மா 53 டி20 போட்டிகளில் கேப்டனாக செயல்பட்டு 41 டி20 போட்டிகளில் வெற்றி பெற்று முதலிடத்தில் இருக்கிறார். இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் தோனி இருக்கிறார். 72 போட்டிகளில் டி20 அணியின் கேப்டனாக இருந்து 41 போட்டிகளில் வென்றிருக்கிறார். இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் விராட் கோலி இருக்கிறார். கோலி 50 டி20 போட்டிகளில் இந்திய அணியின் கேப்டனாக இருந்து 30 போட்டிகளில் வெற்றியை பெற்றிருக்கிறார். 

இந்த தொடரில் 150வது டி20 போட்டியில் களமிறங்கிய ரோகித் சர்மா டக் அவுட்டானார். இருப்பினும் கேப்டனாக அணியை சிறப்பாக வழி நடத்தி வெற்றியில் தன்னுடைய பங்காற்றினார். இதன் வாயிலாக இந்த வெற்றியையும் சேர்த்து ரோஹித் சர்மா கேப்டனாக இதுவரை 41 வெற்றிகளை பெற்றுள்ளார். அதன் வாயிலாக சர்வதேச டி20 கிரிக்கெட்டில் அதிக வெற்றிகளை பதிவு செய்த இந்திய கேப்டன் என்ற எம்எஸ் தோனியின் வாழ்நாள் சாதனையை ரோஹித் சர்மா சமன் செய்துள்ளார்.

பேட்ஸ்மனாக சோகம்

ரோகித் சர்மா டி20 கிரிக்கெட்டில் பேட்ஸ்மனாக தடுமாற்றமாகவே செயல்பட்டு வருகிறார். 2022 டி20 உலகக் கோப்பையில் 10 போட்டிகளில் விளையாடி 127 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதன் பிறகு ஐபிஎல் தொடரில் 15 போட்டிகளில் விளையாடி 239 ரன்கள் மட்டுமே எடுத்தார். இந்த தொடரில் இரண்டு போட்டிகளிலும் டக் அவுட்டானார். இந்தியாவின் முன்னணி டி20 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இருந்த ரோகித் சர்மா, கடந்த சில மாதங்களாக மோசமான பார்மில் உள்ளார்.

அவரது இந்த பார்ம் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்துள்ளது. அவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்டால், டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் இடம்பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆனால் அவர் தொடர்ந்து மோசமாக செயல்பட்டால், இந்திய அணி நிர்வாகம் அவருக்குப் பதிலாக வேறு ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கலாம்.

மேலும் படிக்க | லேட்டா வந்தாலும் லேட்டஸ்டா வந்த விராட் கோலி! வைரலாகும் சிக்ஸர் வீடியோக்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News