இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சிறப்பாக விளையாடி 4-1 என கணக்கில் கைப்பற்றியிருக்கிறது. கேப்டன் ரோகித் சர்மா இந்த வெற்றிக்கு இந்திய அணியில் இடம்பெற்ற இளம் வீரர்கள் மற்றும் பந்துவீச்சாளர்களை வெகுவாக பாராட்டி பேசியுள்ளார். அதேபோல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவது எப்போது என்ற கேள்விக்கு பதிலளித்திருக்கும் ரோகித் சர்மா, ஒருநாள் காலையில் எழும்போது என்னால் கிரிக்கெட் விளையாட முடியாது என நினைக்கும் தருணத்தில் ஓய்வை அறிவித்துவிடுவேன் என்றும் கூறியுள்ளார். மேலும், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக தன்னுடைய கிரிக்கெட் சிறப்பாக வளர்ச்சியடைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க | IPL 2024: 10 ஐபிஎல் அணிகளின் தலைமை பயிற்சியாளர்களும்... அவர்களின் சாதனைகளும்!
“நான் ஒருநாள் கண்விழிக்கும்போது, இது போதுமானதாக இல்லையே, என்னால் விளையாட முடியுமா?. என்னுடைய விளையாட்டை விளையாடும் அளவுக்கு நான் தயாராக இல்லை என்று நினைக்கும் தருணத்தில், அது குறித்து எல்லோரிடமும் பேசிவிட்டு ஓய்வு முடிவை அறிவித்துவிடுவேன். அதேநேரத்தில் கடந்த இரண்டு மூன்றாண்டுகளாக என்னுடைய கிரிக்கெட் நன்கு வளர்ச்சியடைந்துள்ளது. சிறந்த கிரிக்கெட் விளையாடுகிறேன் என நினைக்கிறேன்” என ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், இங்கிலாந்து அணிக்கு எதிராக இவ்வளவு பெரிய வெற்றி பெறுவது என்பது சாதாரண விஷயமல்ல. இந்த வெற்றிக்கு எல்லா விஷயங்களும் சரியாக இருக்க வேண்டும். அந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய அணிக்கும் இந்த வெற்றியில் பங்கு இருக்கிறது. முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தபோது அதில் இருந்து மீண்டு வந்து தொடரை கைப்பற்றியிருக்கிறோம். அதற்கு அணியில் இருக்கும் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஷ்வால், சர்ஃபிராஸ் கான், துருவ் ஜூரல் உள்ளிட்ட இளைஞர்கள் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு சர்வதேச கிரிக்கெட் அனுபவம் வேண்டுமானால் குறைவாக இருக்கலாம், மற்றபடி அவர்களுக்கு போதுமான கிரிக்கெட் விளையாடி இருக்கிறார்கள். அதனை இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கண்கூடாக பார்க்க முடிந்தது” என கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்தார்.
இந்திய அணியில் இருக்கும் இளம் கிரிக்கெட் வீரர்கள் அழுத்தமான சூழல்களில், கடினமான நிலைகளில் சிறப்பாக விளையாடுவதாக தெரிவித்திருக்கும் ரோகித் சர்மா, அதுவே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றியதாகவும் மகிழ்ச்சி தெரிவித்தார். பந்துவீச்சாளர்கள் எல்லோரும் சிறப்பாக செயல்பட்டனர், குறிப்பாக குல்தீப் தன்னுடைய பந்துவீச்சில் மேஜிக்கை கொண்டு வந்தார். அவரின் சிறப்பான பந்துவீச்சு தொடர் முழுவதும் இந்திய அணி கம்பேக் கொடுக்க துருப்புச்சீட்டாக இருந்தது என்றும் ரோகித் சர்மா புகழாரம் சூட்டினார்.
மேலும், இந்திய அணியில் இருக்கும் வீரர்கள் யாரும் தங்களின் தனிப்பட்ட சாதனைகளில் கவனம் செலுத்துவதில்லை என்று கூறிய ரோகித் சர்மா, சிறப்பாக அனுபவித்து நன்றாக கிரிக்கெட் விளையாடினால் சாதனைகள் எல்லாம் தானாக வரும் என கூறினார்.
மேலும் படிக்க | IPL 2024: இந்த வருடம் ஐபிஎல்லில் களமிறங்க உள்ள 5 புதிய கேப்டன்கள்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ