மும்பை அணியில் இருந்து வெளியேறும் பும்ரா, சூர்யகுமார் - கிரீன் சிக்னல்கொடுத்த சிஎஸ்கே, குஜராத்

Mumbai Indians and Rohit Sharma: மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேறும் எண்ணத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் இருக்கின்றனர். ரோகித் சர்மாவை கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கிய மும்பை அணியின் அணுகுமுறை அவர்களுக்கு பிடிக்கவில்லை. 

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 17, 2023, 03:03 PM IST
  • மும்பை அணிக்குள் நிலவும் குழப்பம்
  • ரோகித் விரைவில் அணி மாறுகிறார்
  • பும்ரா, சூர்யகுமார் அடுத்தடுத்து மாற விருப்பம்
மும்பை அணியில் இருந்து வெளியேறும் பும்ரா, சூர்யகுமார் - கிரீன் சிக்னல்கொடுத்த சிஎஸ்கே, குஜராத் title=

Rohit Sharma's Future: மும்பை இந்தியன்ஸ் அணி ஐபிஎல் 2024 ஏலத்துக்கு முன்பாக மிகப்பெரிய மாற்றத்தை செய்யலாம் என நினைத்தது அந்த அணிக்கு இப்போது பெரும் சிக்கலாக  மாறியுள்ளது. ஹர்திக் பாண்டியாவை குஜராத் அணியிடம் இருந்து வாங்கிய அதே வேகத்தில் அவரை மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக அறிவித்தது. அதில் இருந்துதான் சிக்கல் தொடங்கியது. ஏனென்றால் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ரோகித் சர்மா தொடர்வார் என உறுதியளித்துவிட்டு, ஐபிஎல் அணிகளுக்கு இடையே வீரர்களுக்கான வர்த்தக தேதி நடந்து முடிந்த ஒரு சில தினங்களில் அவரை கேப்டன் பொறுப்பில் இருந்து அதிரடியாக நீக்கியது.

இதுதான் அணியில் இருக்கும் சக வீரர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியது. பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் வெளிப்படையாக தங்களின் அதிருப்தியை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு தெரிவித்துவிட்டனர். அத்துடன் தாங்கள் வேறு அணிக்கு விளையாட தயாராக இருப்பதையும் மற்ற அணிகளுக்கு சிக்னல் மூலம் தெரியப்படுத்தியுள்ளனர். என்ன நடந்தது என்பதை விரிவாக பார்க்கலாம். 

மேலும் படிக்க | IPL Auction 2024: ஸ்டீவ் ஸ்மித் முதல் உமேஷ் வரை - இவர்களுக்கு ஐபிஎல் ஏலத்தில் மவுசு இருக்காது..!

ஹர்திக் பாண்டியாவை வாங்கிய மும்பை இந்தியன்ஸ்

ஐபிஎல் ஏலம் டிசம்பர் 19 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டவுடன், அணிகளுக்கு இடையேயான வீரர்களுக்கான வர்த்தகம் டிசம்பர் 12 ஆம் தேதி முடிவடையும் என்ற அறிவிப்பு வெளியானது. அப்போதே குஜராத் அணியில் இருந்து ஹர்திக் பாண்டியா விலக இருப்பதாகவும், மீண்டும் மும்பை இந்தியன்ஸூக்கு வர இருப்பதாகவும் தகவல் வெளியானது. டிசம்பர் 12 ஆம் தேதி இரவு ஹர்திக் பாண்டியா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வருவது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஆனால் யார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்? என்ற சந்தேகம் எழுந்தது. ரோகித் சர்மா கேப்டனாக தொடர்வார் என்ற தகவல் கசிந்தாலும், ஹர்திக் பாண்டியாவுக்கு கேப்டன் பொறுப்பு வழங்குவதாக மும்பை அணி உறுதியளித்து அழைத்து வந்திருப்பதாகவும் தகவல் வெளியானது. 

ஹர்திக் பாண்டியா கேப்டனாக அறிவிப்பு

அதன்படியே மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ரோகித் சர்மா தானாக கேப்டன் பொறுப்பில் இருந்து விலகவில்லை என்பதால் அவரை அந்த அணி நிர்வாகம் கேப்டன் பொறுப்பில் இருந்து நீக்கியது. இது ரசிகர்களுக்கும், சக அணி வீரர்களுக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. பும்ரா மற்றும் சூர்யகுமார் யாதவ் ஆகியோர் தங்களின் அதிருப்தியை இன்ஸ்டாகிராம் மற்றும் எக்ஸ் பக்கங்களில் வெளிப்படுத்தினர். 5 ஐபிஎல் கோப்பைகளை மும்பை அணி வென்றபோது அணியை கேப்டனாக வழிநடத்திய ரோகித் சர்மாவுக்கு அந்த அணி கொடுக்கும் மரியாதை இதுதானா? என பலரும் கேள்வியை முன்வைத்தனர்.

ரோகித் சர்மா விருப்பம்

இதனைத் தொடர்ந்து மும்பை அணியில் இருந்து வெளியேற ரோகித் சர்மா விருப்பம் தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது. அவரை வாங்க டெல்லி அணி முயன்றபோது டீல் ஓகே ஆகவில்லை என்பதால், அந்த வர்த்தகம் பாதியிலேயே முடிவுக்கு வந்துவிட்டது. ஐபிஎல் ஏலம் முடிந்தவுடன் மீண்டும் வீரர்களுக்கான வர்த்தகம் மீண்டும் தொடங்க இருப்பதால் ஐபிஎல் தொடங்குவதற்கு முன்பாக மும்பை அணியில் இருந்து அதிகாரப்பூர்வமாக ரோகித் சர்மா வெளியேறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரை வாங்க 9 ஐபிஎல் அணிகளுக்கும் விருப்பம் இருந்தாலும், கையில் இருப்பு இருக்கும் தொகையை வைத்தே முடிவு செய்ய அனைத்து அணிகளும் காத்திருக்கின்றனர்.

சூர்யகுமார், பும்ரா சிக்னல்

ரோகித் சர்மாவை டெல்லி அணிக்கு பிறகு சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகள் வாங்க அதிகம் ஆர்வம் காட்டுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த வரிசையில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் உள்ளது. இது ஒருபுறம் இருக்க சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரும் வேறு அணிக்கு செல்ல விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுதான் இப்போதைய ஹைலட். அவர்களுக்கு மும்பை அணியின் அணுகுமுறை பிடிக்கவில்லை. மும்பை அணிக்காகவே விளையாடிக் கொண்டிருந்தவர்களை விட்டுவிட்டு, அந்த அணியில் இருந்து வெளியேறி வேறொரு அணியில் விளையாடிய ஹர்திக் பாண்டியாவுக்கு மும்பை முக்கியத்துவம் கொடுத்திருப்பதை இருவரும் ரசிக்கவில்லை. இதனால் இவர்களும் மும்பை அணியில் இருந்து வெளியேற அதிக வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.  

மேலும் படிக்க | கில்லியாக சொல்லியடிப்பாரா கில்... ஏலத்தில் குஜராத்தின் பிளான் என்ன?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News