ஆஸ்திரேலியாவில் தொடங்க இருக்கும் 20 ஓவர் உலக கோப்பையில் இந்தியாவின் ஸ்டார் பவுலராக இருக்கும் பும்ரா விளையாடவில்லை. அவருக்கு ஏற்பட்டிருக்கும் முதுகு வலி பிரச்சனை காரணமாக கடைசி நேரத்தில் இந்திய அணியில் இருந்து விலகியுள்ளார். அவர் விளையாட வேண்டும் என்பதற்காக மருத்துவ குழுவினர் தீவிரமாக சிகிச்சை அளித்தும், காயம் பெரிதாக இருந்ததால் கட்டாயம் ஓய்வெடுக்க வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார். இது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமாக இருக்கும் நிலையில், பும்ரா விலகலுக்கு டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மாவே காரணம் என புது குண்டு தூக்கி வீசியுள்ளார் இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர்.
மேலும் படிக்க | பும்ரா இல்லை - உலகக்கோப்பையில் இந்தியாவை காப்பாற்றப்போவது யார்? - இதோ!
பும்ரா காயம் குறித்து அவர் பேசும்போது, பயிற்சியாளர் மற்றும் இந்திய அணியின் கேப்டன் ஆகியோரை கடுமையாக விளாசினார். அதில், இங்கிலாந்தில் காயம் ஏற்பட்டு சிகிச்சை எடுத்துக் கொண்ட பும்ராவை ஆஸ்திரேலிய தொடரில் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன? அவர் 20 ஓவர் உலககோப்பை கிரிக்கெட்டில் இந்திய அணியின் துருப்புச் சீட்டாக இருப்பார் என தெரிந்தும், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் விளையாட அனுமதித்தது பெரிய தவறு.
முதல் போட்டியில் ஓய்வு கொடுக்கப்பட்ட பும்ரா, தனக்கு வலி இருக்கிறது என 2வது போட்டியின்போது கேப்டன் ரோகித் சர்மா மற்றும் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிடம் தெரிவித்திருக்கிறார். ஆனால் அவரை கட்டாயப்படுத்தி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது போட்டியில் விளையாட வைத்துள்ளனர். இதனால் பும்ராவுக்கு காயம் அதிகமாகி தென்னாப்பிரிக்க தொடரில் விளையாட முடியாமல் போனது. மேலும், 20 ஓவர் உலக கோப்பையில் இருந்தும் விலக நேரிட்டிருகிறது. அணியை நிர்வகிக்கும் பொறுப்பில் இருக்கும் இவர்களுக்கு இதெல்லாம் தெரியாதா? என காட்டமாக சாடியுள்ளார் சஞ்சய் பாங்கர்.
மேலும் படிக்க | ரோஹித் சர்மாவுக்கு ஜோடி இவரா - உலகக்கோப்பைக்கு இந்தியாவின் 'ஓப்பனிங்' பிளான்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ