சூர்யகுமார் யாதவும் இல்லை! இனி இவர் தான் இந்தியாவின் டி20 அணி கேப்டன்?

புச்சி பாபு தொடரில் சூர்ய குமார் யாதவிற்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அடுத்த மாதம் நடைபெற உள்ள பங்களாதேஷ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.  

Written by - RK Spark | Last Updated : Sep 1, 2024, 02:15 PM IST
  • சூர்யகுமார் யாதவுக்கு ஏற்பட்ட காயம்.
  • புச்சி பாபு தொடரின் போது காயம் ஏற்பட்டது.
  • அவருக்கு பதில் பொறுப்பேற்கவுள்ள 3 கேப்டன்கள்.
சூர்யகுமார் யாதவும் இல்லை! இனி இவர் தான் இந்தியாவின் டி20 அணி கேப்டன்? title=

தற்போது இந்திய அணியின் மூத்த வீரர்கள் பலர் புச்சி பாபு தொடரில் விளையாடி வருகின்றனர். இதில் மும்பை அணிக்காக சர்பராஸ்கான் தலைமையில் சூர்யகுமார் யாதவ் விளையாடி வருகிறார். இந்த போட்டியின் போது சமீபத்திய இலங்கை தொடரில் இந்தியாவின் டி20 கேப்டனாக நியமிக்கப்பட்ட சூர்யகுமார் யாதவ் காயம் அடைந்தார். இதனை தொடர்ந்து உடனடியாக மைதானத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காயம் எந்த அளவிற்கு ஏற்பட்டுள்ளது என்பது குறித்த தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒருவேளை காயம் அதிகமாக இருந்து சூர்யகுமார் விரைவில் குணமடையவில்லை என்றால், பங்களாதேஷுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் புதிய கேப்டனை நியமிக்கப்பட வேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. 

மேலும் படிக்க | இதுதான் சரியான நேரம்! ஓய்வை அறிவித்த தோனியால் அறிமுகமான வேகப்பந்து வீச்சாளர்!

மொத்தம் இரண்டு டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட பங்களாதேஷ் அணி இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி செப்டம்பர் 19ம் தேதி தொடங்க உள்ளது. அதனை தொடர்ந்து டி20 தொடர் அக்டோபர் 9 முதல் அக்டோபர் 12 வரை நடைபெறுகிறது. அதற்குள் சூர்யகுமார் யாதவ் குணமடையவில்லை என்றால், யார் கேப்டன் பொறுப்பை ஏற்பார்கள் என்பதை பார்ப்போம். தற்போது பங்களாதேஷ் அணி பாகிஸ்தானில் 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. ராவல்பிண்டியில் நடைபெற்ற முதல் டெஸ்டில் பங்களாதேஷ் பாகிஸ்தானை வீழ்த்தி வரலாற்று வெற்றி பெற்றது.

ஹர்திக் பாண்டியா 

சூர்யகுமார் யாதவ் இல்லாத பட்சத்தில் இந்திய அணியின் முன்னாள் டி20 கேப்டனாக இருந்த ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவுக்கு மீண்டும் கேப்டன் பொறுப்பு கிடைக்கலாம். டி20 உலகக் கோப்பையில் துணை கேப்டனாக இருந்து சிறப்பாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியா, அதன் பிறகு நடைபெற்ற இலங்கை தொடரில் கேப்டனாக நியமிக்கப்படவில்லை. ரோஹித் சர்மா டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்ததும், முழு நேர கேப்டனாக ஹர்திக் பாண்டியா பொறுப்பேற்பார் என்று எதிர்பார்த்த நிலையில் சூர்யகுமார் யாதவை கேப்டனாக நியமித்தது பிசிசிஐ. பாண்டியா தலைமையில் இந்திய அணி 16 போட்டிகளில் விளையாடி 10 வெற்றிகள் மற்றும் 5 தோல்விகளை சந்தித்துள்ளது.

ஷுப்மான் கில்

இந்திய டி20 அணியின் கேப்டன் பதவிக்கு ஷுப்மான் கில் போட்டிபோட்டு வருகிறார். சமீபத்தில் நடந்து முடிந்த இலங்கை சுற்றுப்பயணத்தின் போது துணை கேப்டனாக நியமிக்கப்பட்டார். மேலும் டி20 உலக கோப்பைக்கு பிறகு நடைபெற்ற ஜிம்பாப்வேக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டார். ஷுப்மானின் தலைமையின் கீழ், ஜிம்பாப்வேக்கு எதிரான டி20 ஐ தொடரை 4-1 என்ற கணக்கில் இந்தியா வென்றது.

ரிஷப் பந்த்

சூர்யகுமார் யாதவ் இல்லை என்றால், விக்கெட் கீப்பர் ரிஷப் பந்தை கேப்டனாக நியமிக்க அதிக வாய்ப்புள்ளது. 2024 ஐபிஎல் மற்றும் டி20 உலக கோப்பையில் சிறப்பாக விளையாடி மீண்டும் கம்பேக் கொடுத்துள்ளார் பந்த். ஐபிஎல்லில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார் பந்த். இதற்கு முன்பு சில போட்டிகளில் இந்திய டி20 அணிக்கு கேப்டனாக இருந்துள்ளார். பந்த் தலைமையில் 5 டி20 போட்டிகளில் இந்திய அணி 2 வெற்றி, 2 தோல்வி மற்றும் 1 டிரா பெற்றுள்ளது.

மேலும் படிக்க | இந்திய அணிக்கு தேர்வான ராகுல் டிராவிட் மகன் - புலிக்கு பிறந்தது பூனையாகுமா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News