விளையாட்டுச் செய்திகள்: ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் இந்திய அணி நம்பர்-1 அணியாக முன்னேறியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்டில் இந்தியா இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டெஸ்ட் அணி தரவரிசை பட்டியல் குறித்து நேற்று புதுப்பிக்கப்பட்டது. அதில் டெஸ்ட் போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய அணி 115 புள்ளிகளுடன் முதல் இடத்தில் இடம் பெற்றுள்ளது. அதுமட்டுமில்லாமல் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான தரவரிசை பட்டியலிலும் இந்திய அணி முதல் இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் மூன்று வடிவங்களிலும் நம்பர்-1 இடத்தைப் பிடித்த முதல் அணியை இந்தியா திகழ்கிறது.
ஒரே கேப்டன்சியின் கீழ் ஒரு அணி அனைத்து வகை கிரிக்கெட் வடிவங்களிலும் நம்பர்-1 இடத்தில் இருப்பது இதுவே முதல்முறை ஆகும். அந்தவகையில் ரோஹித் உலகின் முதல் கேப்டன் என்ற பெருமையை பெற்றார். இந்திய அணியின் மூன்று வடிவங்களிலுக்கும் கேப்டன் ரோஹித் சர்மா ஆவார். அவரது கேப்டன்சியின் கீழ் அணி மூன்று வடிவங்களிலும் நம்பர்-1 ஆக உள்ளது.
டெஸ்ட் தரவரிசையில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி பின்னுக்குத் தள்ளியுள்ளது. 111 புள்ளிகளுடன் ஆஸ்திரேலியா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது. இங்கிலாந்து 106 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. நியூசிலாந்து நான்காவது இடத்திலும், தென் ஆப்பிரிக்கா ஐந்தாவது இடத்திலும் உள்ளன. மேற்கிந்திய தீவுகள் ஆறாவது இடத்திலும், பாகிஸ்தான் ஏழாவது இடத்திலும் உள்ளன. இலங்கை எட்டாவது இடத்திலும், வங்கதேசம் 9வது இடத்திலும், ஜிம்பாப்வே 10வது இடத்திலும் உள்ளன.
ஒருநாள் அணிகள் தரவரிசையில் இந்தியா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா 2வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளன. டி20 அணிகள் தரவரிசையில் இந்தியா தொடர்ந்து முதலிடத்திலும், இங்கிலாந்து மற்றும் பாகிஸ்தான் அணிகள் முறையே இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்திலும் உள்ளன.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மீதும் பார்டர்-கவாஸ்கர் டிராபி 2023 இன் இரண்டாவது டெஸ்ட் போட்டி டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் பிப்ரவரி 17 முதல் நடைபெற உள்ளது.
மேலும் படிக்க: Rewind: தோனியை தூக்க நினைத்த தேர்வுக்குழு! ஸ்ரீநிவாசன் செய்த அதிரடி நடவடிக்கை!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ