புது தில்லி: உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கொவிச் (Novak Djokovic) கொரோனா (COVID-19) தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.
அவர் Belgrade வந்த உடன், அவருக்கு கொரோனா தொற்றுக்கான பரிசோதனை நடத்தப்பட்டதாகவும், அதன் முடிவு பாஸிடிவ் என வந்தததாகவும், அவரது மனைவி ஜெலேனாவிற்கும் தொற்று உள்ளது. ஆனால் குழந்தைகளின் பரிசோதனை முடிவுகள் நெகடிவ் என வந்துள்ளதாக, செர்பியா தனது அதிகாரபூர்வ வலைதளத்தில் செய்தி வெளியிட்டுள்ளது.
Also Read | ரசிகர்களின் எண்ணிக்கையில் சாதனை 2020 ICC மகளிர் T20 உலகக்கோப்பைத் தொடர்
கடந்த மாதம் தான் பங்கேற்ற விளையாட்டு போட்டிகளில், உண்மையான ஈடுபாட்டுடனும், தூய்மையான இதயத்துடனும் பங்கேற்றதாகவும், தனது இந்த போட்டித் தொடர், பிராந்தியத்தில் அன்பு மற்றும் ஒற்றுமைக்கான செய்தியை கொடுப்பதாகவும் நோவாக் ஜோக்கொவிச் (Novak Djokovic) குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த 14 நாட்களுக்கு தான் தனிமையில் இருக்கப் போவதாகவும், ஐந்து நாட்களுக்கு பிறகு மீண்டு பரிசோதனை செய்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளார்.
Also Read | சீன வீரர்கள் 99 நொடிகளில் செய்ததை இந்திய வீரர்கள் 26 நொடிகளில் சாதித்தனர்
முன்னதாக பல்கான் பகுதியில் நடந்த Djokovic-ன் Adria Tour exhibition போட்டித் தொடரில் பங்கேற்ற, க்ரொயேஷியாவின் Borna Coric, பல்கேரியாவின் Grigor Dimitrov மற்றும் Viktor Troicki ஆகியோருக்கு முன்னதாக கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
தற்போது, டென்னிஸ் ஆட்டக்காரரான நோவாக் ஜோக்கொவிச் (Novak Djokovic) மற்றும் அவரது மனைவி ஜெலேனாவிற்கு COVID-19 தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது