துபாய்: சானியா மிர்சா டென்னிஸில் சர்வதேச அளவிலான இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா திங்கள்கிழமை (பிப்ரவரி 20) துபாயில் தொடங்கும் WTA நிகழ்வில் தனது தொழில் வாழ்க்கையின் இறுதிப் போட்டியில் விளையாடுகிறார். இரட்டையர் பிரிவில் அமெரிக்க டென்னிஸ் வீராங்கனை மேடிசன் கீஸுடன் சானியா ஜோடி சேர்ந்துள்ளார்.
இந்திய டென்னிஸ் ஜாம்பவான் சானியா மிர்சா டென்னிஸ் மைதானத்தில் இருந்து விலகவிருக்கிறார். கடந்த மாதம் ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் தனது கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியில் சானியா விளையாடினார். தற்போது, துபாயில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சானியா மிர்சா டென்னிஸ் மைதானத்தில் இன்று களம் இறங்குகிறார்.
சானியா மிர்சாவின் விளையாட்டு அனுபவமும், திறமையும், அவரை விளையாட்டுத் துறையில் வேறு ஒரு முக்கியமான இடத்திற்கு கொண்டு சென்றுவிட்டது.
மேலும் படிக்க | IND vs AUS: கேஎல் ராகுலுக்கு செக் வைத்த பிசிசிஐ! அணியில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்!
6 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் சானியா மிர்சா
சானியா மிர்சா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் எட்டுப் பதக்கங்களைப் பெற்றுள்ளார், அவர் பங்கேற்ற ஒவ்வொரு பதிப்பிலும் குறைந்தது ஒன்றைப் பெற்றுள்ளார். அவர் ஆறு கிராண்ட்ஸ்லாம் பட்டங்களையும் 43 WTA பட்டங்களையும் வென்றுள்ளார்.
2015ல் இரட்டையர் பிரிவில் உலகின் நம்பர் 1 ஆக உயர்ந்த சானியா மிர்சா
இரட்டையர் பிரிவில், சானியா மிர்சா ஏப்ரல் 2015 இல் WTA இரட்டையர் தரவரிசையில் நம்பர் 1 ஆக உயர்ந்தார், வரலாற்றில் உச்சநிலையை எட்டிய முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றார்.
ஏடிபி அரங்கில், இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் மற்றும் மகேஷ் பூபதி மட்டுமே நம்பர் 1 இடத்தை எட்டியுள்ளனர். இந்திய ஏஸ் கிட்டத்தட்ட 21 மாதங்கள் தனது முதலிடத்தைத் தக்க வைத்துக் கொண்டார், ஜனவரி 2017 வரை நம்பர் 1 இடத்தை தக்க வைத்துக் கொண்டார்
சானியா மிர்சா
சானியா மிர்சா பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சோயிப் மாலிக்கை 2010 இல் திருமணம் செய்து கொண்டார். சோயிப் மாலிக்குடன் சானியா விவாகரத்து செய்து கொண்டதாக வதந்திகள் வந்தன,
சானியா மிர்சாவுக்கு சோயப் மாலிக் தம்பதிக்கு இசான் என்ற ஒரு மகன் உள்ளார். மகன் பிறக்கும்போது டென்னிஸில் இருந்து ஓய்வு எடுத்தார் சானியா. அவர் தனது இறுதி கிராண்ட்ஸ்லாம் போட்டியான ஆஸ்திரேலிய ஓபன் 2023 இல் ரோஹன் போபண்ணாவுடன் கலப்பு இரட்டையர் இறுதிப் போட்டியை எட்டினார்.
மேலும் படிக்க | WPL 2023: கிரிக்கெட் ‘மெண்டர்’ ஆகும் டென்னிஸ் வீராங்கனை! மாத்தி யோசிக்கும் RCB
சானியா மிர்சாவின் கடைசி போட்டி
இந்திய டென்னிஸ் ஒற்றையர் பிரிவு வீராங்கனைகளின் தரவரிசையில் சானியா மிர்சா முதலிடம் பிடித்துள்ளார்
சானியா மிர்சா 2005 இல் ஹைதராபாத் ஓபனை வென்றார், இது இந்திய டென்னிஸ் வீரர் வீராங்கனைகள் வென்ற முதல் WTA ஒற்றையர் பட்டம் என்பது குறிப்பிடத்தக்கது.
2007 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில், அவர் WTA ஒற்றையர் தரவரிசையில் 27வது இடத்திற்கு உயர்ந்தார், இது இன்றுவரை, ஒற்றையர் பிரிவில் ஒரு இந்தியர் பெற்ற அதிகபட்ச சர்வதேச முன்னிலை தரவரிசையாகும்.
தற்போது, டென்னிஸில் இருந்து விலகும் சானியா, கிரிக்கெட் உலகிலும் தனது சேவைகளை தொடரவிருக்கிறார். மகளிர் பிரீமியர் லீக் (WPL) முதல் சீசனில் பங்கேற்கிறார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) மகளிர் அணியின் 'டீம் மென்டராக' சானியா மிர்சா நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும் படிக்க | IPL 2023: முக்கிய வீரர் மீண்டும் காயம்! சிஎஸ்கே அணிக்கு பெரும் பின்னடைவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ