ஹர்திக் பாண்டியாவை மும்பை ஏன் தக்கவைக்கவில்லை? 3 முக்கிய காரணங்கள்

மும்பை இந்தியன்ஸ் அணி ஐ.பி.எல் கோப்பைகளை வெற்றிபெறுவதற்கு காரணமாக இருந்த ஹர்திக் பாண்டியாவை ஏன் ரீட்டெயின் செய்யவில்லை? என்பதற்கான 3 காரணங்களை பார்க்கலாம்.

Written by - S.Karthikeyan | Last Updated : Dec 2, 2021, 10:04 PM IST
ஹர்திக் பாண்டியாவை மும்பை ஏன் தக்கவைக்கவில்லை? 3 முக்கிய காரணங்கள் title=

ஐ.பி.எல் போட்டிகளில் பலம் வாய்ந்த மும்பை அணி, இதுவரை 5 முறை சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியுள்ளது. இந்தியன் ப்ரீமியர் லீக் போட்டிகளில் அதிக முறை கோப்பையை வென்ற அணி என்ற மகத்தான சாதனையுடன் இருக்கும் மும்பை அணியில், நட்சத்திர வீரராக ஜொலித்த ஹர்திக் பாண்டியாவை அந்த அணி இந்த முறை ரீட்டெயின் செய்யவில்லை. இத்தனைக்கும் 4 முறை மும்பை கோப்பையை வென்றபோது அணியில் இருந்தவர். பேட்டிங், பவுலிங் மற்றும் பீல்டிங் என அனைத்து துறைகளிலும் பங்களிப்பைக் கொடுத்த பாண்டியாவை, மும்பை அணி ரீட்டெயின் செய்யாமல் ரோகித், பும்ரா, சூர்யகுமார் யாதவ் மற்றும் பொல்லார்டை தக்கவைத்துக் கொண்டுள்ளது.

ALSO READ | ஐ.பி.எல் ஒளிபரப்பு- டிவி உரிமத்துக்கு முட்டிமோதும் 3 நிறுவனங்கள்

மும்பை அணியின் இந்த முடிவு ஆச்சரியம் அளித்தாலும், 3 விஷயங்களைக் கருத்தில் கொண்டு அந்த அணி இந்த முடிவை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. முதல் காரணம், அண்மைக்காலமாக ஹர்திக் பாண்டியாவின் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு சிறப்பாக இல்லை. அவுட்டாப் ஃபார்மில் இருக்கும் அவர், மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப முயற்சித்துக் கொண்டிருக்கிறார். 20 ஓவர் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணியில் இடம்பிடித்திருந்த ஹர்திக் பாண்டியாவின் பர்ஃபாமென்ஸ் சொல்லிக்கொள்ளும்படியாக இல்லை. இதனால் அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்ற விமர்சனங்கள் எழுந்தன. அதனால், பர்மாமென்ஸ் அடிப்படையில் அவரை மும்பை அணியில் இருந்து நீக்கும் முடிவுக்கு அந்த அணி நிர்வாகம் வந்திருக்கலாம்.

இரண்டாவது, ரீட்டெயின் லிஸ்டில் தக்க வைக்க வேண்டும் என்றால் ஹர்திக்கின் ஊதியம் பிரச்சனையாக இருந்திருக்கும். 16 கோடி ரூபாயில் ரோகித்தும், 12 கோடியில் பும்ராவும் தக்க வைக்கப்பட்டதால், ஹர்திக் பாண்டியாவுக்கு 3வது இடத்தை வழங்க மும்பை இந்தியன்ஸ் முன்வந்திருக்கும். இது அவருக்கு உடன்பாடு இல்லாமல் இருந்திருக்க வாய்ப்பு உள்ளது. மூன்றாவதாக, ஹர்திக் பாண்டியாவும், கே.எல்.ராகுலும் நெருங்கிய நண்பர்களாக இருப்பது அனைவருக்கும் தெரியும். பஞ்சாப் அணியின் கேப்டனாக இருந்த கே.எல் ராகுல், அந்த அணி தக்கவைக்க முன்வந்தபோதும் அதனை வேண்டாம் என கூறி ஏலத்தில் பங்கேற்க முடிவெடுத்துள்ளார். அதாவது, புதியதாக வந்துள்ள 2 அணிகளில் ஒரு அணி அவரை முன்கூட்டியே ஏலத்திற்கு வருமாறு கேட்டுக் கொண்டதாக கூறப்படுகிறது. அதன்படி அவரும் ஏலத்தில் பங்கேற்று, புதிய அணிக்கு செல்ல உள்ளார். 

ALSO READ | IPL-லில் தான் அதிக வருமானம் கிடைக்கிறது - ஜேசன் ஹோல்டர் ஓபன் டாக்!

அவருடன் ஹர்திக் பாண்டியாவும் அந்த அணியில் இணைந்து விளையாட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனடிப்படையிலும், மும்பை அணி ஹர்திக்கை தக்கவைக்காமல் இருந்திருக்கலாம் என்ற பேச்சும் அடிபடுகிறது. இந்நிலையில், மும்பை அணியில் இருந்து விடைபெறுவதை ஹர்திக் பாண்டியா உறுதி செய்துள்ளார். இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள அவர், மும்பை அணியுடன் பயணித்த நினைவுகளை என்றும் மறக்கமாட்டேன் எனத் தெரிவித்துள்ளார்.

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News