டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு வெள்ளிப் பதக்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். தமிழக வீரர் மாரியப்பன் (Mariyappan Thangavelu) 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் தங்கப் பதக்கம் வென்றார்.
ரியோ பாராலிம்பிக்ஸ் தங்கப் பதக்கம் வென்ற மாரியப்பன் தங்கவேலு பத்ம ஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது..
உயரம் தாண்டுதல் போட்டியில் T63 இறுதி பிரிவில் தமிழக வீரர் மாரியப்பன் தங்கவேலு தனது இரண்டாவது முயற்சியிலும் 1.88 மீட்டர் உயரம் தாண்டினார்.
Just as at Rio 2016, #IND have athletes in the podium places in Men's High Jump T63 Final!
Mariyappan Thangavelu and Sharad Kumar have won #silver and #bronze medals respectively, taking medal tally into double figures! #Tokyo2020 #Paralympics #ParaAthletics pic.twitter.com/HSadcK8Nnt
— #Tokyo2020 for India (@Tokyo2020hi) August 31, 2021
தனது மூன்றாவது மற்றும் இறுதி முயற்சியில் மாரியப்பன் தவற விட, அமெரிக்காவின் சேம் க்ரீவ் தங்கப் பதக்கம் வென்றார். மாரியப்பனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. சரத்குமார் வெண்கலப் பதக்கம் வென்றார்.
#TokyoParalympics, High Jump: Mariyappan Thangavelu (Sport Class T42) wins silver, Sharad Kumar (Sport Class T42) takes bronze pic.twitter.com/Iax2HFDZ3m
— ANI (@ANI) August 31, 2021
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஆகஸ்ட் 24 முதல் செப்டம்பர் 5 ஆம் தேதி வரை மாற்றுத் திறனாளிகளுக்கான பாரா ஒலிம்பிக் போட்டிகள் (Paralympics Games) நடைபெற்று வருகின்றன. இந்தியாவின் சார்பில் 54 வீரர்கள் பங்கேற்றுள்ளனர்.
பி 1 ஆண்கள் 10 மீ ஏர் பிஸ்டல் எஸ்எச் 1 போட்டியில் இந்திய துப்பாக்கி சுடும் வீரர் சிங்கராஜ் அதனா வெண்கலப் பதக்கம் வென்றார். ஆறாவது சிறந்த துப்பாக்கி சுடும் வீரராக எட்டு பேர் கொண்ட இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்ற பிறகு அதானா மொத்தமாக 216.8 புள்ளிகளைப் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
முன்னதாக, டோக்கியோ பாராலிம்பிக்ஸ் விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார் அவனி லேகாரா. அவரைத் தவிர பவினா பென் படேல் வென்றார். நிஷாத் குமார் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார். இந்த பாராலிம்க்ஸில் இந்தியாவின் பதக்கப் பட்டியல் பெரிதாகியுள்ளது.
READ ALSO | Paralympic Games: வெள்ளிப் பதக்கம் வென்ற பவினாபென் படேலுக்கு இந்தியா வாழ்த்து
READ ALSO | பாராலிம்பிக் போட்டி வெற்றியாளர்களின் புகைப்படத் தொகுப்பு
READ ALSO | Paralympics 2021 துப்பாக்கிச் சுடும் போட்டிகளில் தங்கம் வென்றார் அவனி லெகாரா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR