இங்கிலாந்து சென்றுள்ள 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணியில் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Jul 15, 2021, 08:48 AM IST
  • . இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் அணி
  • உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி
  • இந்திய கிரிக்கெட் அணியில் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று
இங்கிலாந்து சென்றுள்ள 2 இந்திய வீரர்களுக்கு கொரோனா உறுதி title=

லண்டன்: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டிக்கு கேப்டன் கோலி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க சென்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வரும் ஆகஸ்ட் 4ம் தேதி நடக்க உள்ளது. 

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடருக்கு (World Test Championship) இன்னும் 3 வார காலம் உள்ள நிலையில் சிறிய சிக்கல் ஒன்று ஏற்பட்டு உள்ளது. இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய கிரிக்கெட் (India vs England) அணியில் ஒருவருக்கு தற்போது கொரோனா தொற்று (Covid-19) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்திய அணியை சேர்ந்த இருவருக்கு லேசான அறிகுறிகள் தெரிய வந்ததையடுத்து கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த பரிசோதனையில் ஒருவருக்கு கொரோனா நெகட்டிவ் உறுதியாகியுள்ளது. இதனால் இருவருமே தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்புடன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ALSO READ | India vs England: ஆரம்பம் ஆகிறது இரண்டாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்

 

 

இன்று முதல் மூன்று நாட்கள் பயிற்சி விளையாட்டு துர்காமில் தொடங்க உள்ளது. அந்த விளையாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட கிரிக்கெட் வீரர் கலந்து கொள்ள மாட்டார் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுவரை பாதிக்கப்பட்ட வீரர் யார் என்பது அதிகாரப் பூர்வமாக யாருக்கும் தெரிவிக்கப்படவில்லை.

இதையொட்டி இங்கிலாந்தின் தேசிய சுகாதார சேவைத்துறை அனைத்து வீரர்களையும் மீண்டும் கொரோனா பரிசோதனை செய்ய உள்ளது.   கடந்த சில நாட்களாக கிரிக்கெட் வீரர்கள் அனைவருமே கூட்டம் அதிகம் உள்ள இடங்களில் இருந்ததாக கூறப்படுகிறது. தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள வீரர்கள் தங்களது தனிமை முடிந்து துர்ஹாமில் இந்திய அணியுடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ALSO READ | WTC Final தோல்வியின் தாக்கம்: இந்த வீரர்கள் அணியிலிருந்து நீக்கப்படலாம்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News