இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய அணி, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் மூன்று டெஸ்டின் முடிவில் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வென்றுள்ளது. மூன்றாவது டெஸ்ட் ’டிரா’வில் முடிந்தது.
ராஞ்சி டெஸ்டின் முதல் நாளில் பவுண்டரி தடுக்கும் முயற்சியில், இந்திய கேப்டன் கோலிக்கு வலது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டது. இதை ஆஸ்திரேலிய வீரர்கள் களத்தில் குத்தி காட்டிக்கொண்டே இருந்ததால் கோலி ஸ்மித்தை செய்தியாளர்கள் சந்திப்பில் தாக்கினார்.
இதனால் கோபம் அடைந்தத ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று, விளையாட்டு உலகின் டொனால்டு டிரம்ப் கோலி என செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பை போலவே கோலி எதற்கு எடுத்தாலும், ஊடங்களை குறை சொல்வதாகவும், அதன் மூலம் தன் மீதுள்ள குறையை மறைக்க முயற்சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.