ICC ஒருநாள் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் கோலி, பும்ரா...

ஆகஸ்ட் மாதம் துவங்கி ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவில்லை என்றாலும், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் முறையே பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான சமீபத்திய ICC ஒருநாள் தரவரிசையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர். 

Last Updated : Nov 13, 2019, 09:15 AM IST
ICC ஒருநாள் தரவரிசை: தொடர்ந்து முதலிடத்தில் கோலி, பும்ரா... title=

ஆகஸ்ட் மாதம் துவங்கி ஒருநாள் ஆட்டத்தில் விளையாடவில்லை என்றாலும், இந்திய கேப்டன் விராட் கோலி மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோர் முறையே பேட்ஸ்மேன்கள் மற்றும் பந்து வீச்சாளர்களுக்கான சமீபத்திய ICC ஒருநாள் தரவரிசையில் தரவரிசையில் முதலிடத்தில் உள்ளனர். 

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரின் மூன்றாவது ஆட்டத்தில் இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் கோலி இடம்பெற்று இருந்தார். இப்போட்டியில் கோலி ஒரு கம்பீரமான சதத்தை அடித்தப்போது ​​இந்தியா தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது, மேலும் ஆட்ட நாயகன் மற்றும் தொடர் விருதுகளையும் அவருக்கு பெற்று தந்தது.

இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ICC ஒருநாள் தரவரிசையில் கோலி தனது முதல் இடத்தினை 895 புள்ளிகளுடன் மீட்டெடுத்துள்ளார். இவரைத்தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ரோஹித் சர்மா 863 மதிப்பீட்டு புள்ளிகளுடன் கோலிக்கு பின்னால் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். என்றபோதிலும் டாப் 10-ல் வேறு எந்த இந்திய வீரரும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதேவேளையில் தொடக்க ஆட்டக்காரர் ஷிகர் தவான் பட்டியலில் 19-வது இடத்திற்கு தள்ளப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

பந்து வீச்சாளர்களுக்கான சமீபத்திய தரவரிசையில் பும்ரா தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார், 797 மதிப்பீட்டு புள்ளிகளுடன் அவர் முதல் இடத்தைப் பிடித்துள்ளார். பட்டியலில் இரண்டாவது இடத்தில் நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ட்ரெண்ட் 740 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தனது பெயரினை பதிவு செய்துள்ளார். அதேவேளையில் ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் முஜீப் உர் ரஹ்மான் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தனது நல்ல செயல்பாட்டினை வெளிப்படுத்திய பின்னர் 707 மதிப்பீட்டு புள்ளிகளுடன் மூன்றாம் இடத்திற்கு முன்னேறியுள்ளார். இவரைத்தொடர்ந்து  தென்னாப்பிரிக்காவின் வேகப்பந்து வீச்சாளர் ககிசோ ரபாடாவை 694 புள்ளிகளுடன் நான்காம் இடத்திற்கு பின்னோக்கி சென்றுள்ளார்.

ஆல்-ரவுண்டர்களுக்கான பட்டியலில், இந்திய வீரர் ஹார்டிக் பாண்ட்யா 246 மதிப்பீட்டு புள்ளிகளுடன் 10-வது இடத்தில் உள்ளார். உலகக் கோப்பை வென்ற இங்கிலாந்தின் நாயகன் பென் ஸ்டோக்ஸ் 319 மதிப்பீட்டு புள்ளிகளுடன் தொடர்ந்து தரவரிசையில் முதலிடத்தில் உள்ளார்.

டிசம்பர் மாதம் மூன்று ஆட்டங்கள் கொண்ட தொடரில் மேற்கிந்திய தீவுகளை எதிர்த்து ஒருநாள் போட்டிகளை இந்தியா விளையாடவுள்ளது. இப்போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் இந்திய வீரர்கள் தரவரிசையில் தங்களது இடத்தினை முன்னேற்ற முயற்சிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் கோலி தனது நிலையை முதலிடத்தில் நிலைநிறுத்த ஒரு வாய்ப்பைப் பெறுவார் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், பும்ரா மற்றும் பாண்ட்யா ஆகியோ காயங்களிலிருந்து மீண்டு வராத நிலையில் இருவரின் புள்ளிப்பட்டியல் இருப்பு குறித்து கணிக்க இயலாத நிலை ஏற்பட்டுள்ளது.

Trending News