சரக்கு மற்றும் சேவை வரிக்கான ஒரு மிகப்பெரிய மோசடி பற்றி தெரியவந்துள்ளது. சென்னையில், ஜிஎஸ்டி கிரெடிட் பெற போலி வரி விலைப்பட்டியல்களை வழங்கி, ரூ .33 கோடி வரி மோசடி செய்த 31 வயது இளைஞரை வடக்கு சென்னை மத்திய சரக்கு மற்றும் சேவை வரி ஆணையம் வெள்ளிக்கிழமை கைது செய்தது.
"விரிவான விசாரணை மற்றும் ஆதாரங்களை சேகரிப்பதற்கான தேடல்களுக்குப் பிறகு இந்த கைது மேற்கொள்ளப்பட்டது. கைது செய்யப்பட்ட நபர் கூடுதல் தலைமை பெருநகர மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்பட்டார். அவர் டிசம்பர் 18 வரை நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டார்” என்று GST முதன்மை ஆணையர் ரவீந்திரநாத் தெரிவித்தார்.
சென்னையில் (Chennai) சுமார் 100 போலி வணிக மையங்களைத் திறந்து மற்ற நபர்களின் அடையாள ஆவணங்களுடன் GST பதிவைப் பெறுவது இந்த மோசடியில் ஈடுபட்ட மூன்று நபர்களின் செயல்முறையாக இருந்தது.
"இத்தகைய போலி நிறுவனங்களை உருவாக்கியதன் நோக்கம், GST கிரெடிட் மோசடிகளில் (GST Fraud) ஈடுபடுவதாகும். இந்த நிறுவனங்கள் எந்தவொரு வணிக பரிவர்த்தனையிலும் ஈடுபடாமலும், எந்த வித சரக்கு அல்லது சேவைகளை அளிக்காமலும், தாங்கள் உருவாக்கிய போலி நிறுவனங்களுக்கு வரி விலைப்பட்டியல்களை வழங்கி வந்தன. GST கிரெடிட் லாபங்களை பெற இப்படிப்பட்ட மோசடி செய்யப்பட்டது” என்று ரவீத்ரநாத் கூறினார்.
ALSO READ: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளாக ஒன்றாக சத்தியப்பிரமாணம் செய்துகொண்ட தம்பதி
போலி நிறுவனங்களிலிருந்து பெறப்பட்ட போலி வரி இன்வாய்ஸ்களின் (Invoice) அடிப்படையில், உள்ளீட்டு வரிக் கடனைப் பயன்படுத்தி இந்த போகஸ் இன்வாய்ஸ்களுக்கு GST-யும் வாழ்ங்கப்பட்டது". இந்த செயல்பாட்டில், 350 கோடி ரூபாய் இன்வாய்ஸ் மதிப்பில், கைது செய்யப்பட்ட நபர் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் ரூ .33 கோடி GST கடன் மோசடி செய்யப்பட்டது" என்று முதன்மை ஆணையர் கூறினார்.
மேலும், கைது செய்யப்பட்ட நபரின் மற்ற இரு கூட்டாளிகளைத் தேடும் பணியில் GST துறை ஈடுபட்டுள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்ட அல்லது பயனடைந்த மற்ற அனைவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த மோசடி செய்பவர்களுக்கு மோசடி செய்ய உறுதுணையாக இருந்து உதவிய வரி பயிற்சியாளர்கள் மற்றும் தணிக்கையாளர்கள் மீதும் தங்கள் கடுமையான பார்வை உள்ளதாகவும் அவர்கள் மீதும் விசாரணை நடத்தப்படும் என்றும் கமிஷனர் மேலும் தெரிவித்தார்.
ALSO READ: J.Jayalalithaa: இரும்புப் பெண்மணி அம்மாவின் 4ஆம் ஆண்டு நினைவு தினம்
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR