தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா..... மொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்வு..!

சென்னையில் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது...!

Last Updated : Jul 21, 2020, 07:03 PM IST
தமிழகத்தில் மேலும் 4,965 பேருக்கு கொரோனா..... மொத்த பாதிப்பு 1,80,643 ஆக உயர்வு..!  title=

சென்னையில் 1,130 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, சென்னையில் மட்டும் பாதிப்பு எண்ணிக்கை 88,377 ஆக அதிகரித்துள்ளது...!

தமிழகத்தில் இன்று மேலும் 4,965 பேருக்கு கொரோனா வைரஸ் (Coronavirus) பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது, கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2,626 ஆக உயர்ந்துள்ளது. 

இது குறித்து தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது.... தமிழகத்தில் இன்று புதிதாக 4,965 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில், 4,887 பேர் தமிழகத்தை சேர்ந்தவர்கள். சுமார், 78 பேர் வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் என கண்டறியபட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மொத்தம் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 1,80,643 ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் இன்று பாதிக்கப்பட்ட 4,985 பேரில் சென்னையில் மட்டும் 1,130 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதால், சென்னையில் மட்டும் சுமார் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

தமிழகத்தில் 113 ஆய்வகங்கள் (அரசு - 58 மற்றும் தனியார் - 55) உள்ளன. அதில், இன்று மட்டும் 51,066 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 20,35,645 மாதிரிகள் சோதனை செய்யபட்டுள்ளது. இன்று கொரோனா உறுதியானவர்களில், 3,010 பேர் ஆண்கள். 1,955 பேர் பெண்கள். மொத்தமாக  1,09,838 ஆண்களும், 70,782 பெண்களும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 23 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். தமிழகத்தில் இன்று மட்டும் 4,894 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இந்நிலையில், வீடு திரும்பியவர்களின் மொத்த எண்ணிக்கை எண்ணிக்கை 1,26,670 ஆக உள்ளது.

Image

Image

தமிழகத்தில், இன்று மட்டும் கொரோனா பாதித்த 75 பேர் உயிரிழந்தனர். அதில், 27 பேர் தனியார் மருத்துவமனையிலும், 48 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்தனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 2,626 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 51,344 பேர் சிகிச்சையில் உள்ளனர். 12 வயது வரை உள்ள சிறுவர், சிறுமிகள் என 9,028 பேர், 13 முதல் 60 வரை உள்ளவர்கள் 1,49,283 பேரும், 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் 22 ஆயிரத்து 332 பேரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ALSO READ | Corona Vaccine: மனித பரிசோதனையின் சில முக்கிய அம்சங்கள்!!

மாவட்ட வாரியாக கொரோனா பாதிப்பு, டிஸ்சார்ஜ் விவரங்கள்.... 

சென்னையில் மட்டும் 88,377 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையை தவிர்த்து, இன்று, திருவள்ளூரில் 366 பேருக்கும், விருதுநகரில் 360 பேருக்கும், தூத்துக்குடியில் 269 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 262 பேருக்கும், செங்கல்பட்டில் 256 பேருக்கும், கோவையில் 176 பேருக்கும், ராணிப்பேட்டையில் 173 பேருக்கும், திருவண்ணாமலையில் 163 பேருக்கும், வேலூரில் 160 பேருக்கும், கன்னியாகுமரியில் 159 பேருக்கும், மதுரையில் 158 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.

இன்று சென்னையில் 21 பேரும், மதுரையில் 7 பேரும், திருவள்ளூர், திருச்சியில் தலா 6 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும், தேனியில் 4 பேரும், ராணிப்பேட்டை, சிவகங்கை, திருவண்ணாமலை, வேலூரில் தலா 3 பேரும், அரியலூர், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், ராமநாதபுரத்தில் தலா 2 பேரும், கடலூர், கரூர், நாமக்கல், திருப்பத்தூர், தூத்துக்குடி, திருநெல்வேலியில் தலா ஒருவரும் என 75 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.

Trending News